யப்பா சாமி என்ன இது? புடவை கட்டினா ஈவ் டீஸிங்கா...ஜீ தமிழ் சீரியலுக்கு சின்மயி கேள்வி!

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு சீரியலில் வெளியான ஒரு புரமோ பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து அதனை ஷேர் செய்து நெட்டிசன்கள் ஜீ தமிழ் டிவியையும் அந்த சீரியலை இயக்கிய இயக்குநரையும் கலாய்த்து வருகின்றனர்.

சமீபத்தில் பாடகி சின்மயி கூட தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த காட்சியை கண்டித்து போட்ட ட்வீட்டையும் ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

பேரன்பு

பேரன்பு

சினிமா படங்களின் பெயர்களை சீரியல்களுக்கு வைத்து திரைப்படங்களையே மறக்கடிக்க செய்து வரும் நிலைமை தொடர்ந்து நீடித்து வருகிறது. இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி நடிப்பில் வெளியான பேரன்பு படத்தின் டைட்டிலையும் விட்டு வைக்காமல் அந்த தலைப்பிலும் ஒரு சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

ஈவ் டீசிங்

ஈவ் டீசிங்

பேரன்பு சீரியல் நாயகியும் இன்னொரு நடிகையும் பைக்கில் செல்லும் போது, சில இளைஞர்கள் அவர்கள் பைக்கை வட்டமடித்து ஈவ் டீஸிங் செய்யும் அந்த காட்சி தான் தற்போது சோஷியல் மீடியாவில் பங்கமாக கலாய்க்கப்பட்டு வருகிறது. அதிலும், அந்த ஹீரோயின் இன்னொரு நடிகைக்கு கொடுக்கும் அட்வைஸ் தான் என்ன கொடுமை சரவணன் என பலரையும் சொல்ல வைத்துள்ளது.

உன் மேல தான் தப்பு

உன் மேல தான் தப்பு

பெண்களுக்கு எதிரான வசனத்தை இன்னொரு பெண்ணை வைத்தே பேச வைத்து இருக்கும் இயக்குநரை பலரும் திட்டி வருகின்றனர். அந்த இளைஞர்கள் ஈவ் டீஸிங் செய்ய நீ அணிந்திருக்கும் உடை தான் தூண்டியது என அந்த லீடு நடிகை பேசுவது தான் பலரையும் எரிச்சல் அடைய செய்துள்ளது.

கடுப்பான சின்மயி

கடுப்பான சின்மயி

அந்த சீரியல் க்ளிப்ஸை பார்த்த பாடகி சின்மயி "யப்பா சாமி.. போட்டுருக்க டிரெஸ்னால ஈவ் டீஸிங் பண்றாங்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால் இருவரும் சேலை தான் அணிந்துள்ளனர். என்னால் இன்னமும் நம்பவில்லை. இப்போதும் இதுபோன்ற வசனங்களை எழுதி லீடு நடிகைகளை பேச வைக்கிறாங்களா என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ஸ்லீவ்லெஸ் தான் காரணமா

ஸ்லீவ்லெஸ் தான் காரணமா

இருவரும் சேலை அணிந்துள்ள நிலையில், இன்னொரு பெண் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்தது தான் தப்பு என பேரன்பு சீரியல் நடிகை பேசியிருக்கும் வசனம் பலரையும் பயங்கர கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பம். ஆனால், அது கூட புரிந்து கொள்ளாமல் இப்படி எடுக்கிறாங்களே எனக் கேட்டு வருகின்றனர்.

Recommended Video

Sathya சீரியலில் இருந்து விலகும் Vishnu?? | Zee Tamil Serial, Amul Baby
போல்டான பதிலடி

போல்டான பதிலடி

ஆனால், அதே சிரீயலிலேயே ஸ்லீவ்லெஸ் அணிந்த அந்த பெண் போலீஸ் அங்கிளுக்கு போன் பண்றேன் என சொன்னதும் ஈவ் டீஸிங் செய்தவர்கள் தெறித்து ஓடி விடுவார்கள். கடைசி வரை தனது ஆடை குறித்த கமெண்டை ஏற்றுக் கொள்ளாமல் அந்த நடிகை பேசும் வசனத்தையும் அதே இயக்குநர் தான் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என மொத்த காட்சியையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X