சின்ன சின்ன ஆசை: மக்கள் தொலைக்காட்சியின் மகத்தான நிகழ்ச்சி

By Mayura Akilan

Chinna Chinna Asai
நம் ஒவ்வொருவருக்கும் சின்ன சின்ன ஆசை உண்டு. விமானத்தில் பறக்கவோ, மழையில் நனையவோ, மீன்பிடிக்கவோ ஏதாவது ஆசை அடி ஆழத்தில் இருந்து கொண்டு இருக்கும். வசதியானவர்களுக்கு இந்த ஆசைகள் எளிதில் கைகூடும் ஆனால் வசதியற்ற ஏழை குழந்தைகளுக்கு இது சாத்தியமே இல்லை. இதை கருத்தில் கொண்டு சாலையோரம் வசிக்கும், குடிசைகளில் வசிக்கும் ஏழை சிறுவர்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறது மக்கள் தொலைக்காட்சி.

புதுச்சட்டை, ஐஸ்கிரீம், சைக்கிள், செருப்பு, பொம்மை இப்படி அந்த ஏழைக் குழந்தைகளின் தேவைகள் உலகமே சிறியதுதான். இத்தகைய ஆசைகளை உடைய சிறுவர் சிறுமியர் வசிக்கும் வாழ்விடங்களுக்கேச் சென்று சந்தித்து, அவர்களின் எண்ணங்களையும், ஆசைகளையும் கேட்டு அறிகிறார் தொகுப்பாளர் ஆர்த்தி ஆசைகளைக் கேட்டு அறிவது மட்டும் அல்லாமல், அவற்றை நிறைவேற்றுவதும் தான் இந்நிகழ்சியின் முக்கிய அம்சமாகும்.

அவர்களின் சின்ன சின்ன ஆசைகள், நமக்கு மிகவும் சாதாரணமாகத் தெரிந்தாலும், அவர்களுக்கு என்னவோ அது மிகப் பெரிய, கைக்கு எட்டாத ஆசைகள் என்கிறார் தொகுப்பாளர் ஆர்த்தி. இந்த நிகழ்ச்சி நடத்தும் போது ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்களை நம்முடன் அவர் பகிர்ந்து கொண்டார்.

'சின்ன சின்ன ஆசை' நிகழ்ச்சியில வரும் குழந்தைகள் என்னை ரொம்பவே பாதித்திருக்கிறார்கள். ''இந்த நிகழ்ச்சிக்கான குழந்தைகளை செலக்ட் பண்றதுக்காக ஒரு ஏரியாவுக்கு போனப்ப, அங்கிருந்த குழந்தைங்க கூவத்துல குளிச்சிக்கிட்டு இருந்தாங்க. 'ஏன் இதுல குளிக்கறீங்க'ன்னு கேட்டா, 'நாங்க இங்கேதானே குளிக்க முடியும்'னு சொல்லிட்டு என்னையும் அவங்களோட விளையாட கூப்பிட்டாங்க. நானும் அவங்களோட கூவத்துல கால் நனைச்சுட்டு வந்தேன்.

அதேமாதிரி ஒரு பையனோட ஆசையை என்னால நிறைவேத்தி வைக்க முடியலை. அவனோட அப்பாவும் அம்மாவும் வேறொருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டாங்க. 'எனக்கு எங்கம்மா வேணும்'னு கேட்டப்போ என்ன பதில் சொல்றதுனு தெரியாம கலங்கிட்டேன். உடனே அந்தப் பையன், 'நான் உங்களை அம்மான்னு கூப்பிடட்டுமா'ன்னு கேட்டான். அவனைப் பார்த்து அந்த நிகழ்ச்சியில இருந்த மத்த குழந்தைங்களும் என்னை அம்மான்னே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. கல்யாணத்துக்கு முன்னாலயே 'தாய்'ங்கற பட்டத்தை எனக்கு அவங்க தந்துட்டாங்க''என்று ஆர்த்தி சொல்லும்போதே அவரது கண் கலங்கியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X