ஸ்வேதா உனக்கு 48 மணி நேரம் டைம்.. ஆதாரத்தோடு நிரூபி டைவர்ஸ் தரேன்.. முற்றும் பஞ்சாயத்து

சென்னை: சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதாவின் கணவர் ஆதி, ஒரு பெண்ணை பிளாக் மெயில் செய்ததாகவும், அதனால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும் இணையத்தில் பலவிதமான செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து வீடியோ வெளியிட்டு இருந்த ஸ்வேதா, அநியாயமா ஒரு பெண்ணை கொன்னுட்டியே, என அழுதபடி பேசி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஆதி, 48 மணி நேரம் தருகிறேன் அதற்குள் நான் தான் குற்றவாளி என்பதை உன்னால் நிரூபிக்க முடியுமா என கேட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது தான் ஸ்வேதா. இவருடைய கணவர் ஆதிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளனர். அதே நேரம், நடிகை தாமரை செல்வி, ஆதி தன்னிடம் இருந்து நகையை வாங்கி அடமானம் வைப்பதாக சொல்லி விற்று ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். அதோடு மட்டுமல்லாமல் டிடிஎஃப் வாசன் ஒரு ஆடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், ஆதி ஒரு பெண்ணை பிளாக் மெயில் செய்ததாகவும், பணம் கேட்டு மிரட்டியதாகவும் அதனால், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக, அந்த பெண்ணின் அண்ணன் பேசி இருந்தார்.

Chinna Marumagal Swetha Aadhi
Photo Credit:

கதறி அழுத ஸ்வேதா: இணையத்தில் இந்த ஆடியோ பூதாகரமாக இருக்கும் நிலையில், நடிகை ஸ்வேதா இரு தினங்களுக்கு முன்பு கதறி அழுதபடி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் உன்னால் ஒரு பெண்ணின் உயிரே போய்விட்டது, இன்னும் எத்தனை பேரை இப்படி ஏமாத்துவ, உன்னை போன்ற ஒரு ஆளை நான் காதலித்ததை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். என்னால் முடியவில்லை தயவுசெய்து விட்டு விடு என கதறி அழுதபடி பேசி இருந்தார்.

ஆதி வீடியோ: இதற்கு பதில் அளித்து இருக்கும் ஆதி, தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நான் ஏமாற்றியதை பாத்தியா? நான் அந்த பெண்ணிடம் பேசியதை பாத்தியா? நான் பிளாக் மெயில் செய்ததை பாத்தியா? அந்தப் பெண் தற்கொலை செய்து நீ கொண்டதை பாத்தியா? அந்தப் பெண்ணின் போட்டோ, பேராவது உனக்கு தெரியுமா? இப்படி எதுவுமே தெரியாது. எல்லாத்தையும் நேரில் பார்த்தது போல எப்படி பேசுற, இதனால் தான், நீ பிரில்லியன்ட் என அடிக்கடி நான் செல்வேன்.

48 மணி நேரம் கெடு: உனக்கு 48 மணி நேரம் தருகிறேன். நீ சொல்ற எல்லா குற்றச்சாட்டுக்கும் ஆதாரத்தை காட்டி நான் குற்றவாளி என்பதை நிரூபி. நான் திங்கட்கிழமை காலை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வருகிறேன். அனைவரும் முன்னாடியும் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு உனக்கு விவாகரத்து கொடுக்கிறேன். அப்படி உன்னால் நிரூபிக்க முடியவில்லை என்றால், நீ போட்ட பொய்யான விவாகரத்துக்கு வழக்கை உன்னால் வாபஸ் வாங்க முடியுமா ? என ஆதி அந்த வீடியோவில் பேசி சவால் விடும் வகையில் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X