அய்யோ என்ன விட்டுடு ஆதி.. உன்ன காதலிச்சது பாவமா? கதறி அழுத சின்ன மருமகள் சீரியல் நடிகை!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்வேதா. இவரின் கணவர் ஆதி, நடிகை தாமரை செல்வியிடம் நகையை வாங்கி மோசடி செய்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். இப்படியான நிலையில் ஸ்வேதாவின் கணவர் ஆதி, தொடர்ந்து ஸ்வேதாவுடன் இருந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இதனால், மனம் உடைந்து போன ஸ்வேதா கண்ணீருடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ஸ்வேதா ஆரம்பிக்கும் போதே கண்ணீருடன் பேசினார். இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இருந்தாலும் நான் சில விஷயத்தை உங்களிடம் சொல்ல வேண்டி கட்டாயத்தில் இருக்கிறேன் அதற்காகத்தான் இந்த வீடியோ, நானும் ஆதியும், காதலித்தது திருமணம் செய்து கொண்டது உண்மை தான். ஆனால், அனைவர் முன்பும் எங்களது திருமணம் நடக்கவில்லை, ரிஜிஸ்டர் மேரேஜ் தான் நடந்தது. அவனுக்காக என் ஒட்டுமொத்த குடும்பத்தையும் விட்டுவிட்டு, இவன் மீது இருந்த அன்பை நம்பி வீட்டை விட்டு வெளியில் வந்து ஆதியை திருமணம் செய்து கொண்டேன்.

நடிகை ஸ்வேதா: நாங்க காதலித்துக் கொண்டு இருக்கும் போது, திடீரென பண தேவை இருப்பதாக என்னிடம் சொல்வார். இதனால் நான் அணிந்திருந்த மோதிரம், செயின் என அனைத்தையும் அவருக்காக கொடுத்து இருக்கிறேன். வீட்டில் கேட்டபோது தொலைந்து விட்டது என சொன்னேன். ஆனால், அந்த நகைகளை ஆதி விற்றுவிட்டார். ஒரு கட்டத்தில் நானும் ஆதியும் காதலிப்பது வீட்டில் தெரிந்துவிட்டதால், என்னை பயங்கரமாக அடித்தார்கள்.

ரகசிய திருமணம்: நாம் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டால், நம்மை பிரிக்க முடியாது என்று சொன்னார். அன்னைக்கு நான் செய்த தவறை நினைத்து இன்றும் அழுது கொண்டு இருக்கிறேன். அன்று இரவு வீட்டை விட்டு வெளியில் வந்து ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கொண்டேன். தங்குவது கூட இடமில்லாமல் கோவில் விடுதியில் தங்கினோம். ஒரு இடத்தில் அவரது குடும்பத்தினர் எங்களை ஏற்றுக் கொண்டார்கள். அதன் பிறகு அவர்கள் வீட்டில் தான் இருந்தோம். ஆதி வேலைக்கு போகாததால் அவரது குடும்பத்தினர் தான் எங்களை பார்த்துக் கொண்டார்கள் இது எனக்கு பிடிக்காததால் அவனை அழைத்துக் கொண்டு சென்னை வந்தேன்.

chinna marumagal Serial swetha
Photo Credit:

ஏமாற்றிவிட்டான்: படிக்கும் போதே எனக்கு மாடலிங், நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் மிகவும் கஷ்டப்பட்டு எனக்கு சின்ன மருமகள் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் நல்ல ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். கணவன் மனைவியாக நன்றாக வாழ வேண்டும் என நினைத்து இரபு பகல் பார்க்காமல் நடிச்சி வீட்டுக்கு ஒவ்வொரு பொருளாக வாங்கினேன். ஆதி மேல் கேஸ் இருப்பது தெரிந்ததும், நாளைக்கு ஃபியூச்சர்ல ஏதாவது பிரச்சனை வரப்போகிறது என்று கடன் வாங்கி செலவு செய்து அந்த கேசை நடத்தினேன்.

நான் என்ன பாவம் செய்தேன்: இப்போ வரைக்கும் நான் அந்த கடனை நான் கட்டிட்டு இருக்கேன். ஆனால், நீ என்னை பற்றி கவலையே படாமல் தப்பு தப்பா வீடியோ போடுற, உனக்கு எப்படி மனசு வருது. நான் உன்னை காதலிச்சதை தவிர என்ன பாவத்தை செய்தேன், நிம்மதியாவே என்னால வாழ முடியல, தயவுசெய்து என்னை விட்டு, நான் ஏதாவது பண்ணிக்க போறேன் என கதறி அழுதபடி அந்த வீடியோவில் பேசி உள்ளார். பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Read more about: serial swetha ஸ்வேதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X