என் காதலுக்கு தகுதியற்றவர்.. கடவுள் தண்டனை தருவார்.. சின்ன மருமகள் ஸ்வேதா வேதனை பதிவு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் நாயகியாக நடித்து வரும் நடிகை ஸ்வேதா தான் என் மனைவி என உதவி இயக்குநர் ஆதி, ஸ்வேதா மீது புகார் அளித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல், ஆதி தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை தாமரைச்செல்வியும் புகார் அளித்துள்ளார். இப்படி இந்த விவகாரம் சூடு பிடித்து இருக்கும் நிலையில் ஸ்வேதா ஆதி தன்னை ஏமாற்றியதாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நான் ஏற்கனவே கூறியபடி, நாங்கள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டோம் (reg marriage). ஆன போது எனக்கு 20 வயது மட்டுமே. சின்ன பொண்ணாக இருந்ததால்,அவரைப் பற்றி பல விஷயங்கள் எனக்கு தெரியாமல் இருந்தது. பின்னர் காலப்போக்கில் ஒவ்வொன்றாக உண்மைகள் தெரிய வந்தன. அவர் தன்னிடம் ஒரு வழக்கு உள்ளது என்று கூறினார். அதை சரி செய்யலாம் என்று நம்பிக்கையில், அந்த வழக்கிற்காக நான் அதிகமான செலவுகளைச் செய்தேன். ஆனால் இப்போது தான் புரிகிறது அந்த வழக்கை பற்றி அவர் கூறிய அனைத்தும் பொய். அவர் மீது பல வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

நடிகை ஸ்வேதா: இதனால், இந்த உறவு தொடர இயலாது என்று நான் தீர்மானித்து விட்டு, அவரை விட்டுவிட்டு என் குடும்பத்துடன் திரும்பி சேர்ந்தேன். காதலித்த காலத்தில், "வியாபாரம் செய்கிறேன்" என்று கூறி, என்னிடமிருந்து பெருமளவு பணம் வாங்கிய ஏமாற்றினார். நான் அவரை "காதலித்த" காரணத்தினால், அவர் கூறிய அனைத்தையும் நம்பி அவரிடம் பணத்தை கொடுத்தேன். தற்போது, நான் அவரிடம் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளேன். அதில் தற்போது தீர்ப்பு வர இருக்கிறது. அந்த பிரச்சினை சட்டப்படி சமாதானமாகி வருவதால் இதுவரை அமைதியாக இருந்தேன்.
தகுதியில்லாதவர்: இப்போது தான் அவர் எவ்வளவு பெரிய மோசடி செய்தவர் என்பது எனக்கு முழுமையாக புரிந்துள்ளது. நான் எடுத்த இந்த முடிவுக்காக பெருமைப்படுகிறேன். அவரை விட்டுவிலகியது தான் சரியான முடிவு. நானும் அவரை நம்பி காதலித்தேன்; என் காதலின் காரணமாக அவரை முழுமையாக நம்பி, எந்த இடத்திலும் அவரை விட்டுக் கொடுக்காமல், எல்லா மேடைகளிலும் அவரின் பெயரை சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், என் காதலுக்கு தகுதியற்றவர் என்பதை அவர் நிரூபித்தார்.அவர் பலரையுயும் இதேபோல் ஏமாற்றியுள்ளார். பலர் பாதிக்கப்பட்டு வருந்தி வருகின்றனர். என்னை ஏமாற்றியதுபோல், மற்றவர்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.
கடவுள் தண்டனை தருவார்: நான் ஏற்கனவே தெளிவாகவே அவர் ஒரு மோசடி நபர்.. யாரும் அவரை நம்ப வேண்டாம் என்று கூறியிருந்தும், அவரை நம்பி ஏமாந்து இருக்கிறார்கள். அவரால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வேலையை கூட நிம்மதியாக செய்ய முடியாமல் உள்ளேன். சமூக ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளேன். நான் விலகிய பின்னரும், வழக்கு தொடர்ந்து பின்னும் கூட அவர் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார். அவரை நம்பி யாரும் ஏமாற வேண்டம். இவை எல்லாத்துக்கும் அவர் பதில் அளித்தே ஆக வேண்டும், மேலும், கடவுள் சரியான தண்டனையை வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











