சின்ன மருமகள் சீரியல் நடிகையின் புருஷன்.. என்ன நம்ப வச்சி ஏமாத்திட்டான்.. தாமரைச்செல்வி கண்ணீர்!

சென்னை: சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா என் மனைவி என உதவி இயக்குநர் ஆதி கூறி வந்தார். இதை மறுத்த ஸ்வேதா, எனக்கு அவரை தெரியாது, அவர் கூறுவது பொய் என்று இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டு இருந்தார். இதைதொடர்ந்து உதவி இயக்குநர் ஆதி, யாருனே தெரியாதுனு சொன்ன ஸ்வேதா, விவாகரத்து மனு அனுப்பி இருப்பதாக பேட்டி அளித்து இருந்தார்.

நம்பாதிங்க: இப்படி இவர்கள் பஞ்சாயத்தே தீராத நிலையில், சின்ன மருமகள் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை தாமரைச்செல்வி, நடிகை ஸ்வேதாவின் கணவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதாவின் புருஷன். இவன் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டேன் என்று என்னிடம் உதவி கேட்டான. நானும் என்னுடைய மூன்று சவர நகைய வச்சு பணத்தை கொடுத்தேன். அவன் பெயரில் தான் நகையை அடகு கடையில் வைத்தோம். அதற்கு காரணம் எங்க ஏரியாவில் நகை வச்சா கம்மியான பணம் தான் கிடைக்கும். எனக்கு தெரிஞ்ச இடத்துல நகையை வச்சா அதிகம் பணம் கிடைக்கும் என சொல்லி, அவனுட ஏரியாக்கு கூட்டிட்டு போயி, அவன் சொன்னா கடையில் அவன் பெயரில் நகையை வைத்து பணத்தை வாங்கி கொடுத்தோம்.

Chinna marumagal thamarai selvi
Photo Credit:

ஏமாத்திட்டான்: அதுவரைக்கும் எங்க கூட இருந்தவன், அந்த நகையை அடகு கடையிலிருந்து மீட்டு, அதை விற்று பெண்கள் தினத்திற்கு அனைத்து பெண்களுக்கும் காசு கொடுக்கிறான். அந்த வீடியோவை பாக்க பாக்க எனக்கு வயறிறு எரியுது. அந்த நகையை நான் திண்டுக்கல்லில் வாங்கினேன். அதற்கான பில் என்னிடம் இருக்கிறது. நான் ரொம்ப அடிமட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு உழைச்சு இந்த இடத்திற்கு வந்து இருக்கேன். ஒருத்தருக்கு உதவி செய்ய நினைத்தேன். ஆனால், அவன் என்னை ஏமாத்திட்டான். என் குழந்தைகளுடன் நிம்மதியா இருக்க முடியல, படப்பிடிக்கு கூட போக முடியல, நான் அதிக அளவில் மனவேதனையில் இருக்கிறேன். அவன் மீது காவல்நிலையத்தில் வழக்கு போட்டு இருக்கிறேன். இந்த வீடியோ போடுவதற்கு காரணமே, இவனை நம்பி எந்த நடிகர்களும் இனி ஏமாறக்கூடாது என்பதற்காகத்தான். இப்படி ஒரு தறுதலையை யாரும் நம்பிடாதீங்க என தாமரைச் செல்வி அந்த வீடியோவில் கண்ணீருடன் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X