Kanmanai serial: முத்துவுக்காக சவுண்டும், சவுண்டுக்காக முத்துவும்... சின்னவருக்கு யோகம்!

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் முத்துச்செல்வி திடீர்னு மனம் மாறியது, கோபமா பேசறது.. எல்லாருக்கும் எரிச்சலைத்தான் உண்டாக்கியது.

திடீர்னு அடவாடித்தனமா எடுத்தெறிஞ்சு பேசறது, சின்னவரு உயிரா நினைக்கற சவுந்தர்யாவை அழ வைக்கற அளவுக்கு பேசறதுன்னு ஒரு வாரமா முத்துச்செல்வியின் எமோஷனல் நேரமா ஒடிக்கிட்டு இருந்தது.

முத்துச்செல்விக்கு சவுந்தர்யா, தனது மாமா கண்ணனை உயிருக்கு உயிரா காதலிக்கறது தெரிஞ்சு போயிருது. ஆனா, கொடுத்த வாக்குத்தான முக்கியம்னு சின்னவரு நினைச்சு தன் கழுத்துல தாலி கட்ட நினைக்கறார்னு அவளுக்கு தெரிஞ்சு போகுது.

இதுதானா உங்க கதை?

இதுதானா உங்க கதை?

ஒரு நாள் சவுந்தர்யா தன் மாமா கண்ணனுடன் ஆஃபீஸ் போகும்போது, முத்துவைப் பார்த்து வண்டியை விட்டு இறங்கி வந்து, முத்து.. எனக்கும் , என் கண்ணன் மாமாவுக்கும் கல்யாணம் நடக்கும்போது நீதான் எல்லா வேலைகளையும் முன்ன நின்னு செய்யணும்னு சவுந்தர்யா சொல்ல, முத்துச்செல்விக்கு அது அப்போது உறைக்காமல் போனது ஏன்? அதுக்குப் பிறகு சின்னவரு மேல காதல் வருதே அது எப்படி? இவ்ளோ கதையை இப்போ இப்படி கொண்டு வாறீங்களே, அப்போ அந்த ஒரு இடத்தில் இந்த சீனை தவிர்த்து இருக்கலாமே... இதுதானா உங்க கதை?

சவுந்தர்யா முத்துச்செல்வி

சவுந்தர்யா முத்துச்செல்வி

சின்னவரு மனசுலயும் சவுந்தர்யா அம்மா இருக்காங்க, சவுந்தர்யா மனசுல சின்னவரு இருக்காரு. இவங்களை பிரிக்க முடியாது, பிரிக்கவும் கூடாதுன்னு முத்துச்செல்வி முடிவு பண்ணிடறா. ஆனா, சின்னவரு அப்படி இல்லை. முத்துவை கல்யாணம் செய்துக்கறதா வாக்கு குடுத்து இருக்கார்.அவர் மனசை மாத்தறதும், சவுந்தர்யா அம்மாவும், மாமாவோட வாக்குக்கு உறுதுணையா இருந்து கல்யாணத்தை நடத்தி வைக்கத்தான் முனைப்பு காட்டுவாங்கன்னும் தெரிஞ்சுக்கிட்ட முத்துச்செல்வி, நியாயமா சின்னவருக்கும், சவுந்தர்யாவுக்கும்தான் கல்யாணம் நடக்கணும். இதுக்காக நாம நம்மை கெட்டவளா காமிச்சுகிட்டாத்தான் உண்டுன்னு, நல்ல குணத்தை மாத்திக்கறா.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

முத்துச்செல்வி ஆரத்தி தட்டை தட்டி விடுவதும், சின்னவரின், அக்கா மாமாவை எதிர்த்து பேசுவதும், தாலி வாங்க நானும் வருவேன்னு சொல்றதும், சவுந்தர்யாவை அழ விடுவதும்னு உண்மை போல நடிப்பது ரொம்ப நல்லாருக்கு. இப்போதுதான் ஒரு நல்ல பெண்ணாக அவள் நடந்துக்கறது போலவும் தோணுது. அதோடு, அவள் பக்குவம் அடைந்த பெண் போலவும் காண்பிப்பது சூப்பர். விடலைத் தனமா பிழைக்க வந்த இடத்துல, மாஞ்செடியைப் பார்த்து சின்னவரை லவ் பண்ணினது... சின்னவரேன்னு அவரையே நினைச்சு துள்ளி குதிச்சு ஒடி வந்து, லவ் லெட்டர் எழுதினதுன்னு எல்லாமே வெறுப்பா தோணுச்சு, இப்போது முத்துச்செல்வி கேரக்டர் ஓகே.

சவுந்தர்யா வெளிநாட்டுக்கு

சவுந்தர்யா வெளிநாட்டுக்கு

முத்துச்செல்விக்கும் கண்ணன் மாமாவுக்கும்தான் கல்யாணம் நடக்கணும்னு சவுந்தர்யா நினைச்சு, வெளிநாட்டுக்கு வேலைக்கு போகப் போறேன்னு கிளம்பறா. சவுந்தர்யாவுக்கும், சின்னவருக்கும்தான் கல்யாணம் நடக்கணும்னு முத்துச்செல்வி தன்னை கெட்டவள் போல காமிச்சுக்கறா. அப்போ சின்னவர் கண்ணனுக்கு யோகம்தானே? இப்படிப்பட்ட பொண்ணுங்க இந்த காலத்துல கிடைக்கணுமே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X