அச்சச்சோ ஜோடி போட்டோ கிடைச்சுடுச்சே... சின்னவர் மாட்டிக்குவாரோ!

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல். கண்ணுக்கு அழகான, குளிர்ச்சியான லொக்கேஷன்களில் படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருது.

விவசாயம், கிராமத்து பண்பாடு, பழக்க வழக்கங்கள்னு கொஞ்சம் கதை நகர்வதால். மத்த சீரியலில் இருந்து இது வித்தியாசப்பட்டுத்தான் இருக்கு.

ஆனாலும், இந்த படத்தை பார்க்கையில் சின்ன கவுண்டர், நாட்டாமை படங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியலை.மக்களை முட்டாளாக நினைச்சு, படத்தில் வரும் காட்சிகளை தங்களது சீரியலுக்காக திருடுவது நியாயம் இல்லை.

முத்துச்செல்வி

முத்துச்செல்வி

கண்ணனுக்கு எல்லா விவரமும் தெரியுது.. என்னவோ சின்னத்தம்பி பிரபு போல சில காட்சிகளை வச்சிருப்பது சத்தியமா நல்லா இல்லை. முத்து செல்விக்கு தன் கையால குங்கும பொட்டு வைக்கறது. கூரைப் புடவை, தாலி, குங்கும சிமிழ் குடுப்பதுன்னு சின்னவர் செய்யறார்.இந்த லட்சணத்துல இவர் எல்லாம் தெரிந்த நியாயஸ்தராம். கற்பனைக்கா பஞ்சம்.. சின்னத்தம்பி படத்தை ஏன் காப்பி அடிக்கறீங்க..அதுக்கெல்லாம் பிரபுதாங்க...

சவுந்தர்யா

சவுந்தர்யா

கண்ணன் முதலில் சவுண்டு சவுன்டுன்னு தன் அக்கா பெண்ணை காதலிச்சு, கல்யாணம் வரை வந்து சவுந்தர்யா ஆகாஷை காதலிக்கறான்னு தெரிஞ்சு நின்னுருது.இப்போ சவுந்தர்யா மனசுல கண்ணன் மாமா இருக்கார். இதைக் கூட தெரிஞ்சுக்க முடியாத மக்கா கண்ணனை காமிச்சு இருக்கறதுக்கு முட்டாள்தனம்.ஆனா, கண்ணன் விவரம், புத்திசாலி, குடும்ப வரவு செலவு கணக்கு, விவசாயம், கொள்முதல், எல்லாம் செய்யறவன். எப்படி இருக்கு பாருங்க..

முத்துச்செல்வி

முத்துச்செல்வி

சின்னவரு பொட்டு வச்சது, கூரைப் புடவை, தாலி குங்கும சிமிழ் குடுத்தது எல்லாத்தையும் முத்துச்செல்வி நினைச்சு,நினைச்சு உருகறா பத்தாததுக்கு வள்ளியா நடிச்சப்போ, சின்னவரு கட்டின தாலியையும் மறைச்சு வச்சுக்கிட்டு வாழறா.இவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டு வந்த சின்னவர், முத்துசெல்விக்கு நாளைக்கு கல்யாணம்னு மருதாணியும் போட்டு விடறான்..சின்னவரு கூட சந்தைக்கு போகையில் முத்து செல்வி எடுத்துக்கிட்ட போட்டோ வேற அவளை புலம்ப செய்யுது.

மாப்பிள்ளைகள் கையில்

மாப்பிள்ளைகள் கையில்

இருவரும் எடுத்துக்கிட்ட போட்டோவை பார்த்து ரசிச்சுகிட்டு, பேசிகிட்டு இருந்தா முத்துச்செல்வி. திடீர்னு காத்து அடிக்க, போட்டோ பறக்குது. கூடவே ஓடறா..சின்னவர் வீட்டு மாப்பிள்ளைகள் கையில் அது கிடைச்சுருது.

விடிஞ்சா கல்யாணம் விடுவாங்களா அவங்க..கண்மணி நிலை என்ன, வீட்டின் கவுரம் என்னன்னு பல பிரச்சனைகள் பூதாகரமா கிளம்ப போகுது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X