Kanmani serial: முத்து செல்வியை எப்படி தேடறார் பாருங்க சின்னவரு!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் முத்து செல்வியையம், அவள் தங்கச்சி தங்கத்தையும் லாரிக்காரர்கள் கடத்தி போயிட, அவங்க இரண்டு பேரையும் தேடறதுக்கு கண்ணன் அதான் சின்னவர் போலீசிடம் இருந்து தப்பிச்சுடறான்.
சினிமாவில் ஹீரோ எங்காவது காரியம் முடிக்கப் போனால், யாரையாவது தேடிப் போனால் கூட கிளு கிளுப்புக்கு ஹீரோயினும் கூட போவாங்களே அது மாதிரி உடம்பு சரியில்லாத சவுந்தர்யாவும் கண்ணன் மாமா கூட போறா.
இவங்க வேற டிராக்கில் போயி, கடைசியில் கார் ஆக்சிடென்ட் ஆகிருது. இவங்களுக்கே ரெஸ்ட் தேவைப்படும் நிலையில் முத்து செல்வியைத் தேட உடனே போக முடியலை.

தப்பிச்சுட்டா கண்டுடலாமா
ஒரு ராத்திரி தப்பிச்சு, மறுநாள் ஒரு நாளில் முத்து செல்வியையும், அவளது தங்கக்ச்சியையும் தேடி கண்டு பிடிச்சுடலாமா? கண்மணி சீரியல்,இப்படி வர வர போரடிக்குது. தேவை இல்லாமல் ஒரு கொலை, அதை சின்னவருதான் செய்தார்னு அவர் மேல பழி. இந்த பழியைத் தெரிந்தும், முத்துசெல்வியை அழைச்சுக்கிட்டுத்தான் வருவேன்னு கண்ணன் தன் மாமாவிடம் சொல்றதுன்னு கேலியா இருக்கு கதை.

லாரி தெரிஞ்சு போச்சு
முத்து செல்வியையும், தங்கத்தையும் கடத்தின லாரியை டோல்கேட்டுல விசாரிச்சு கண்டு பிடிச்சாங்க. அடுத்த டோல்கேட்டுல இந்த லாரி வந்துச்சான்னு விசாரிச்சு தேடப் போறாங்களாம். இதுக்கு நடுவுலதான் விபத்து வேற நேர்ந்துருச்சா... அவங்களை காப்பாத்தின வீட்டு பையன் அத்தை பொண்ணை காதலிச்சானாம். ரெண்டு பேரும் சொல்லிக்காமல் இருந்ததில், அவங்க அத்தை வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்தது பிடிக்காம பொண்ணு தூக்கு மாட்டித் தொங்க, மன நோயாளியா ஆகிடறான் பையன்.இந்த கதையை அவர் சொல்ல, கண்ணனும்,சவுந்தர்யாவும் கேட்டு கண்ணீர் வடிக்கறாங்க.

இடையில செருகறீங்க
இந்த காட்சியை காமிச்சதுனால என்ன பண்ண போறீங்க. மறுபடியும் முத்துசெல்விக்கு வாக்கு குடுத்துட்டேன்னு சொல்லப் போறார் சின்னவரு. மாமா முத்துசெல்வியை கல்யாணம் செய்துக்கோ மாமா., நீ குடுத்த வாக்குத்தான் முக்கியம்னு சவுந்தர்யா சொல்ல போறா. இல்லை இன்னும் முத்துசெல்வியை ரெண்டு வாரத்துக்கு கண்டு பிடிக்கப் போறதில்லை.

கதையிலே ஏமாத்திட்டீங்க
கிராமத்து கதை, சூழ்நிலைகள், சின்னவருன்னு சஞ்ஜீவ்க்கு அடை மொழி, பட்ட பெயர் வேறன்னு வச்சு கூப்பிடறது. டிராக்டரில் வயல் உழறது... மக்கள் ஆசையா வந்து தோட்டத்தில் வேலை செய்யறதுன்னு பார்க்க அழகா இருந்தது.அதையும் விட கூட்டு குடும்பம்... விவசாயம் பத்தின விஷயத்தை கூடுதலாக காமிப்பார்களென்று எதிர்பார்த்து சோடை போனதுதான் மிச்சம்.


Click it and Unblock the Notifications











