Chithi 2 Serial: சீரியல்களில் லாஜிக் பார்க்காமல் எப்படி சித்தி..!
சென்னை: சீரியல்களில் லாஜிக் பார்க்காமல் எப்படி இருக்க முடியும்? நீங்கதான் பூதக் கண்ணாடி வச்சு, இதுதான் நிஜம், இதுதான் எல்லார் வாழ்க்கையிலும் நடப்பதுன்னு புட்டு புட்டு வைக்கறீங்க. சரின்னு மக்களும் ஏத்துக்கிட்டு பார்க்கறாங்க. ஆனால், நீங்கள் லாஜிக் பார்க்காதீங்கன்னு சொல்ற மாதிரி, அடிக்கடி கண்டுக்காத காட்சிகள் வச்சால் எப்படி கேட்காமல் இருக்க முடியும்?
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் கதைக்காக என்று நிறைய காட்சிகளை இடைச் செருகலாக்கி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இடம் பார்க்க போகும் காட்சியே ஒரு இடைச் செருகல்தான். இடத்தை போகும் வழியில் பார்த்துட்டு போகலாம்னு சொல்லிட்டு போறாங்க.
அங்கே பார்த்தால் சொல்லாமல் கொள்ளாமல் வெண்பா வந்து நிக்கறா. ஷூட்டிங் ஸ்பாட் கூட மாத்திக்கலை...அதே லொக்கேஷன்..வீட்டு மனையைப் பார்க்கறாங்க. ஆனால், ரொம்ப தூரம் போயி இடத்தைப் பார்க்கணும்னு போறாங்க.இது முதல் இரண்டு எபிசோடுகளில் நடந்தது. அப்பவே... சின்ன சின்ன காட்சிகளை ஷூட் செய்து, எபிசோடில் செருகி இருப்பது போல தோன்றியது.

பத்திரிகைகளிலேயே மறுப்பு
பத்திரிகைகளில் எதாவது தவறு நடந்தாலே அடுத்த இதழில் உடனடியாக மறுப்பு தெரிவித்துவிடலாம் என்கிற காலம், இன்டர்நெட் இல்லாத காலங்களிலேயே உண்டு. ஒரு சமூக ஊடகத்தில் நந்தினியின் வீடியோவை வெளியிட்டு விடுகிறாள் வெண்பா. பின்னர் பெண் பார்க்க போனால், அவள்தான் வெண்பாவின் அண்ணன் அன்பு விரும்பிய பெண் என்று தெரிகிறது. அதுவும் நல்ல பெண், தாங்கள் நினைத்தது போல குடிகாரி இல்லை என்றும் தெரிகிறது. இதில் இன்னொரு லாஜிக் மீறல் என்ன தெரியுமா? வீட்டில் அண்ணன் ஒருத்தன் இருக்கும்போது அப்பாவுக்கு இவள் ஏன் சரக்கு வாங்க போகணும்?

இப்படியும் ஒரு பெண்
என்னதான் ஒரு பெண் டாஸ்மாக்கில் போயி சரக்கு வாங்கட்டுமே.. அதை இன்னொரு பெண் எப்படி வீடியோ எடுத்து சமூக வலைத் தளத்தில் பதிவிடுவாள்? அதிருக்கட்டும், பின்னர் நந்தினி நல்ல பெண் என்று தெரிந்தபிறகு, வீடியோவை பதிவிட்ட வெண்பாவே, இது தவறாக வெளியிடப்பட்ட வீடியோ என்று தெரிவித்து, மன்னிப்பு கேட்கவோ, மறுப்பது தெரிவிக்கவோ வழிகள் இருக்கின்றன. அதை நீக்கிவிட்டாலும் யாருக்கும் தெரியாமல் போய்விடுமே..இதுதான் கதையில் நந்தினி வில்லியாக மாற முக்கிய அம்சம் எனும்போது கொஞ்சம் லாஜிக் பார்க்காமல் விட்டுவிடலாம்.

அம்மா இல்லையே சித்திதானே
அன்பு கல்யாணத்தை பார்க்க கூடாது என்று கட்டளை இடுகிறாள் நந்தினி. சாரதாவும் தாலி கட்டுவதை ஒரு ஓரமாக நின்னு பார்த்துடறேன்னு நந்தினிகிட்டே கெஞ்சறாங்க. நீங்க ஒண்ணும் அம்மா இல்லையே சித்திதானே என்று கேட்கிறாள் நந்தினி. பிள்ளைகள் சிறுவர்களாக இருந்து அவர்களை சித்தி கொடுமைப்படுத்தினால் சித்திதானே என்று இளக்காரமாக பேசலாம். பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்ட பின்னரும், நீங்க சித்திதானே என்று கேட்டுக்கொண்டே இருந்தால் என்னவோ ஒட்டவில்லை. வேண்டும் என்றே காட்சிக்காக திணிப்பது போல்தான் இருக்கிறது.

சித்தி 2 சீரியல்
சித்தி 2 சீரியலில் சித்திதானே என்று வரும் மருமகள் இளக்காரமாக பேச இன்னும் யோசித்து அதை காட்சியாக்கி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. சித்தி என்கிற ஒரே வார்த்தையை வச்சு, சித்திதானே என்று நந்தினி இளக்காரமாக பேசும் காட்சிக்கு சித்தி 2 சீரியல் குழு மெனக்கெடவில்லை. இப்படி நிறைய காட்சிகள் அதிகம் மெனக்கெடல் இல்லாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.ஒரு எபிசோடில் எப்படியும் இரு சீன்களுக்கு லாஜிக் பார்க்காமல் இருந்தால்தான் சித்தி 2 சீரியலை கண்டுகளிக்க முடியும்.


Click it and Unblock the Notifications











