சின்னத்திரையில் சித்திரை திருநாள்…
தமிழ் புத்தாண்டினை ஒட்டி தொலைக்காட்சி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் வரிசை கட்டி ஒளிபரப்பாகின்றன. அதற்கான முன்னோட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
விஜய் டிவியில் எதிர்நீச்சல் சிறப்பு பார்வையில் சிவகார்த்திக்கேயன் குரூப் உடன் கலந்துரையாடல் இருக்கிறது. அதேபோல சேட்டை படத்தில் நடித்த ஆர்யா,ஹன்சிகா குரூப் சேட்டை பண்ணப் போறோம் என்று பேசுகின்றனர். அதில் கூட விடாமல் கதாநாயகியிடம் முத்தம் கேட்கிறார் ஆர்யா.

விஜய் டிவியில் பாரதிராஜா
மதியம் 2.30 மணிக்கு இமயத்திற்கு முதல் மரியாதை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பாரதிராஜாவிற்கான சிறப்பு நிகழ்ச்சி இது. இதில் இளையராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாக்யராஜ், சுசீந்திரன், நடிகர் சத்யராஜ், நடிகைகள் சரண்யா பொன்வண்ணன், கார்த்திகா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சி
சூரியவணக்கம் நிகழ்ச்சியிலேயே புத்தாண்டு ஸ்பெசல் தொடங்கிவிட்டது. காலை 8 மணிக்கு சேட்டைப் பொண்ணு, சேட்டைப் பையன் என்ற நிகழ்ச்சியில் ஆர்யா, சந்தானம், ஹன்சிகா சன் டிவியிலும் பேசுகின்றனர். அஞ்சலி மாயமானதால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. 8.30 மணிக்கு உதயம் படத்திற்காக கானா பாலா உடன் பாட்டுக்கட்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

குட்டிப்புலி சிறப்பு நிகழ்ச்சி
9 மணிக்கு சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த குட்டிப்புலி குழுவினரின் சிறப்பு கலந்துரையாடல் ஒளிபரப்பாகிறது. காலை 9.30 மணிக்கு சாலமன் பாப்பையா நகைக்சுவை பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. இதைத் தொடர்ந்து சிறப்புத் திரைப்படங்களாக ஒரு கல் ஒரு கண்ணாடி, ஒஸ்தி ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன. மாலை 6 மணிக்கு நான் ஈ ஒளிபரப்பாகிறது.
சன் டிவியைப் பொருத்தவரை இது தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி என்று கூறவில்லை. 20 ஆண்டு பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி என்றுதான் முன்னோட்டத்திலேயே கூறுகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான், எம்.எஸ்.விஸ்வநாதன்
ஜெயா டிவியில் காலை 11 மணிக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மதியம் புதிய திரைப்படம் மாற்றான் ஒளிபரப்புகின்றனர். மாலையில் எம்.எஸ்.விஸ்வநாதன் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











