ரதி, ரம்யா நடிக்கும் சித்திரம் பேசுதடி: 5 சகோதரிகளின் கதை

By Mayura Akilan

ஜெயா டிவியில் சித்திரம் பேசுதடி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இது தாயில்லாத, தந்தையின் வளர்ப்பில் வளரும் 5 சகோதரிகளின் கதை.

கோலங்கள், மாதவி, பொக்கிஷம் தொடர்கள் மூலம் சின்னத்திரை நேயர்களுக்கு அறிமுகமான இயக்குனர் திருச்செல்வம் இயக்கும் குடும்பத்தொடர் 'சித்திரம் பேசுதடி'.

ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த தொடர், பெண்களையும் குடும்ப உறவுகளையும் மையப்படுத்தி வந்துகொண்டிருக்கும் தொலைக்காட்சி தொடர்களுக்கு மத்தியில், இன்னொரு கோணத்தில் ரசிகர்களை ஈர்க்கும்விதத்தில் உருவாகி வருகிறது.

Chithiram Pesuthadi a new Serial on Jaya TV

பெண்களின் கதை

ஆணாதிக்கமும் பொருளாதாரமும் அடக்கி ஒடுக்கும் பெண்ணின் மனச்சித்திரம் பேசத் தொடங்கினால் அதில் எத்தனையோ கண்ணீர் சுவடுகள் இருக்கலாம். எண்ண முடியாத சிரிப்பலைகள் பரவலாம்.

பெண்களின் சுதந்திரம்

''சித்திரம் பேசுதடி'' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொடரில், திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் தனிப்பட்ட சுதந்திரம், ரசனை, லட்சியம் என இருக்க, திருமணத்திற்கு பிறகு அவள் அவளாக இருக்கிறாளா? இருக்க முடிந்ததா? என்பதைப் பற்றிய சுவாரஸ்யமான கதைக்களமே இந்தத் தொடர் என்கிறார் இயக்குநர் திருச்செல்வம்.

5 சகோதரிகள்

குந்தவை, தமயந்தி, தேன்மொழி, மணிமேகலை, கயல்விழி இவர்கள் ஐவரும் தாயை இழந்த ஐந்து சகோதரிகள். இவர்களின் தந்தை ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தமிழ்வாணன்.

பெண்களின் கனவுகள்

திருமணத்திற்கு முன்பாக இந்த பெண்களிடம் இருக்கும் கனவுகள், தேடல்கள் எல்லாமே திருமணத்திற்கு பின்பாகவும் உயிர்ப்போடு இருக்கிறதா, அதை அடைகிறார்களா அல்லது மறைந்து போகிறதா? இன்றைய இளம்பெண்களின் வாழ்க்கை தட பதிவுகளை மிக யதார்த்தமாக பேச வருகிறது, இந்த தொடர்.

தேன்மொழியாக ரதி

'சொல்ல மறந்த கதை' திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ரதி கதையின் நாயகி தேன்மொழி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் ரம்யா, பூஜா, ஸ்ரீதேவி ஆகியோர் சகோதரிகளாக நடிக்கின்றனர்.

இயக்குநர் திருச்செல்வம்

இவருடன் சத்யப்பிரியா, விஜயகிருஷ்ணராஜ், பாரதி, மோகன் வைத்யா, ஷ்ரவன், ரம்யா, பூஜா, பிரகாஷ்ராஜன், ஸ்ரீதேவி, பவ்யகலா, ஹர்ஷிதா, சங்கரன்கோவில் கணேசன், ருத்ராஸ்ரீ, மாஸ்டர் ரோகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஜெயா டி.விக்காக திருச்செல்வம் தியேட்டர்ஸ் நிறுவனம் ''சித்திரம் பேசுதடி'' தொடரை தயாரித்து வழங்குகிறார்கள். இந்த தொடருக்கு நவநீத் சுந்தர் இசையமைத்துள்ளார். கவிஞர் தாமரை பாடல்கள் எழுதியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X