Chocolate Serial: சாக்லெட் கலரில் ஒரு பொண்ணு.. அதை வச்சு செம ஃபன்னு.. !
சென்னை: சன் டிவியின் சாக்லேட் சீரியல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருது. இந்த சீரியலை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். சாக்லேட் என்று சீரியல் பெயர்... சாக்லேட் மாதிரி நிறம் உடைய ஒரு பெண்ணின் கதை.
இனியா சாக்லேட்டில் சுவீட்ஸ் செய்வதில் கெட்டிக்காரி. குடும்பமே அதை ஒரு தொழிலாக செய்து வர்றாங்க. இனியா இனிப்பகத்தின் ஸ்பெஷல் என்றால் அது சாக்லேட் சுவீட் செய்து விற்பதுதான். இதற்கு எதிர்மாறாக கார்த்திக் பெரிய பிசினெஸ் குடும்பத்தைச் சேர்ந்தவன்.
காதலி பல்லவிக்கு ஸ்பெஷலா சுவீட் வாங்கித் தரணும்னு ஆசைப்பட்டு, இனியா இனிப்பகத்தில் சாக்லேட்ஸ் சுவீட்டுக்கு ஆர்டர் குடுக்க, அப்போது இனியாவுக்கும்,கார்த்திக்கும் மோதல் ஆரம்பிக்கிறது.

காதல் மோதல்
இந்த மோதல் அவ்வப்போது தொடர்ந்துக்கொண்டு இருக்க, இடையில் கார்த்திக் அப்பா காணாமல் போய்விடுகிறார். ஏகப்பட்ட கடன்.. பிசினெஸ் லாஸ். புது பிசினெஸ் செய்தால் மட்டுமே மீண்டு வர முடியும் என்கிற நிலை. அப்போது அம்மா கொடுக்கும் ஐடியாபடி இனியாவை காதலிப்பது போல நடித்து, அவளிடம் இருந்து சாக்லேட் சுவீட் செய்யக் கற்றுக்கொண்டு, அதே பிசினெஸ் செய்து ஜெயிப்பார்களாம்.
ஸ்ஸ்... அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே!

பல்லவி சம்மதம்
இந்த ஐடியாவுக்கு காதலி பல்லவியும் சம்மதம் தெரிவிக்க, விதம் விதமான கெட்டப் போட்டு இனியாவை காதலிக்கிறான் கார்த்திக். இனியாவின் பெற்றோரும் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்க. இனியாவும் காதலிக்க ஆரம்பிக்க கல்யாணம் முடிவாகி விடுகிறது. கல்யாணம் நெருங்க நெருங்க காதலி பல்லவி துடித்துப் போகிறாள்.

காதலை விட்டுக்கொடுப்பது
உயிருக்கு உயிராக காதலிச்சவனை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுப்பது, அவர்களுக்கு நடக்கும் கல்யாணத்தை பார்ப்பது என்றால் சும்மாவா? பல்லவி இந்த அத்தனை சோகங்களுக்கும் சொந்தக்காரி ஆகிவிட்டாள் கார்த்திக்கை காதலிச்ச பாவத்துக்கு. சும்மாவா... இவளும் ஒரு பிசினெஸ் குடும்பத்தில் பிறந்த பெண்தான். அதனாலதான் பிஸினஸுக்காக ஒரு பொய் கல்யாணம் செய்துக்கொள்ளும் அளவுக்கு காதலனை விட்டுத் தந்து இருக்கிறாள்.

கனவாகி விடாதா?
காதலனுக்கும், அவன் தாலி கட்டிய இனியாவுக்கும் முதலிரவு நடக்கும் அறைக்குள் கார்த்திக்குடன் இருக்கிறாள் பல்லவி. அப்போது வேதனை தாங்க முடியாமல், நடந்தது எல்லாம் கனவாகி இருக்கக் கூடாதா என்று ஏக்கமாக இருக்கிறது கார்த்திக் என்று கண்ணீர் விடுகிறாள். இனியாவுடன் கல்யாணம் ஆன நிலையில், இனி காதலனை எப்படியும் மீட்டு எடுப்பது கஷ்டம்தான் என்று அப்போதுதான் அவளுக்கு புரிந்து இருக்கும் போல!


Click it and Unblock the Notifications











