தியாகம் தொடரில் உருகும் காவேரி

இந்த தொடரில் கதாநாயகியின் அப்பாவாக நடித்துள்ளவர் கன்னடத்தில் நானூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த ஸ்ரீநாத். அம்மாக்கள் செய்த அழுகை அத்தனையும் இதில் அப்பாவிற்கு கொடுத்துவிட்டார் இயக்குநர். அவருக்கு மனைவியாக சபிதா ஆனந்த் நடித்துள்ளார்.
இரண்டு ஆண் குழந்தைக்கும் ஒரு பெண் குழந்தைக்கும் தந்தையான ஸ்ரீ நாத் தனது மகளின் ( காவேரி) திருமணத்திற்காக எத்தனை சிரமங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதே கதை.
ஒல்லியாக இருந்த காவேரி இந்த தொடரில் சற்றே பூசின மாதிரி இருக்கிறார். தியாகம் தொடரில் சீக்கிரம் திருமண விருந்து போடுவார்களா என்பது போகப்போகத்தான் தெரியும். இதில் கவுதமி, உதய், துர்கா, சூசன், பிர்லாபோஸ், விஜய் ஆனந்த், கீர்த்தி ஆகியோர் தொடரின் ஏனைய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்து இந்த தொடருக்காக தியாகம் என்பது யாகம்..'' என்ற பாடலை எழுதி உள்ளார். தினா இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை வசனத்தை குரு எழுதியுள்ளார். ஏ. அப்துல்லா இயக்கியுள்ளார். தங்கம், வசந்தம், மாமா மாப்ளே..' போன்ற பல வெற்றித் தொடர்களை தயாரித்து வரும் விஷன் டைம் நிறுவனம் இப்போது தியாகம்' என்ற புதிய தொடரை தயாரித்துள்ளது. தொடருக்கான படப்பிடிப்பு காரைக்குடி, கும்பகோணம், திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
விஷன் டைம் நிறுவனத்தின் சார்பில் வைதேகி ராமமூர்த்தி இந்த தொடரை தயாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications











