சினிமாவில் சென்டிமென்டுக்கு இப்போ மவுசு கூடி இருக்கு...!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க, இவரை திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் இயக்கத்தில் புதுப்படத்துக்கான பூஜை நேற்று முன்தினம் போடப்பட்டது.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தில் நடிச்ச அனு இம்மானுவேல் நடிக்கிறாராம். இது இப்போ மேட்டரில்லை.

இந்த படத்தில் ஹீரோயினுக்கு அவ்வளவாக வேலை இல்லையாம். கதை கேட்டு பல நடிகைகள் பின் வாங்கிய நிலையில் அனு இம்மானுவேல் சம்மதம் தெரிவிச்சு இருக்கார்.
காரணம், படம் முழுக்க அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் மட்டும்தான் தூக்கலாக இருக்கு..ஹீரோயினுக்கு வேலையே இல்லைன்னுதான். இதனால்தான் தங்கச்சி கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராஜேஷை தேர்ந்தெடுத்து இருக்காங்க.

இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படத்தில் நடிச்சவர். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் இவர்தான் நடிக்கிறார்.
இது ஒன்று சென்டிமென்ட் சிவ கார்த்திகேயன், பாண்டிராஜ்க்கு. இதைவிட முக்கியமான காரணம் ஒண்ணும் இருக்கு. நம்ம தல அஜீத்தின் விஸ்வாசம் படம் முழுக்க குடும்ப சென்டிமென்ட்...
இதனாலேயே இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதனால் தமிழ் சினிமாவின் பார்வை இப்போது குடும்ப சென்டிமென்ட், அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட்னு திரும்பி இருக்குன்னு இன்டஸ்ட்ரியில பேச்சு அடிபடுது.


Click it and Unblock the Notifications











