டேனி, மகத் இடையே செம சண்டை: யாருக்கு அடி விழுந்தது தெரியுமோ?

By Siva

சென்னை: டேனி, மகத் மோதல் காட்சி பயங்கரமாக இருக்கும் என்று எதிர்பார்த்து பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்த்தவர்கள் நம்மை நம்ப வைத்து ஏமாற்றுவதே இவங்களுக்கு வேலையாப் போச்சே என்று நொந்து கொண்டனர்.

பிக் பாஸ் 2 வீட்டில் டேனி, மகத்திடையே கடும் மோதல் ஏற்படுவது போன்று நேற்று ப்ரொமோ வீடியோ வெளியானது. அதை பார்த்த பார்வையாளர்கள் வாவ், இன்று இரவு இருக்கு செம சண்டை இருக்கு என்று எதிர்பார்த்து நிழ்ச்சியை பார்த்தனர்.

வழக்கம் போல பிக் பாஸ் பார்வையாளர்களை ஏமாற்றிவிட்டார்.

மகத்

மகத்

பொம்மை செய்யும் டாஸ்கில் அதற்கு தேவையான பொருட்களை எடுப்பதில் இரு அணிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. டேனி, ஐஸ்வர்யா, யாஷிகா ஏமாற்று வேலை செய்தாவது ஜெயிக்க வேண்டும் என்ற வெறியுடன் விளையாடினார்கள். இதற்கிடையே மகத் டேனி, ஐஸ்வர்யாவை தள்ளிவிட்டார். உடனே டேனிக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து மகத்துடன் மோதினார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

டேனி, மகத் மீது ஏற்கனவே செம கடுப்பில் உள்ள பார்வையாளர்கள் அவர்கள் மோதியதை பார்த்து உற்சாகம் அடைந்தனர். யாருக்கும் அடி விழப் போகிறதோ என்று எதிர்பார்த்தால் சும்மா சவுண்டு மட்டும் கொடுத்துவிட்டு சென்றனர். இந்த சப்பைக்கு பெயரு தான் பயங்கர மோதல் என்று விளம்பரம் செய்தார்களா என பார்வையாளர்கள் பிக் பாஸை திட்டித் தீர்த்தனர்.

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

ஏன்டா, விளையாட்டில் இப்படித் தான் செய்வியா என்று தாடி பாலாஜி மகத்திடம் கேட்க டேனி தான் முதலில் ஆரம்பித்தான் என்று சீறினார் மகத். இதை பார்த்த டேனி விளையாட்டை விளையாட்டாக முதலில் எடுத்துக்கொள் என்று அறிவுரை வழங்கினார். நியாயப்படி விளையாடுமாறு கூறியதோடு அவ்வாறு நடந்தும் கொண்ட ஆள் மும்தாஜ் தான். கடைசியில் இந்த சப்பை மேட்டரை ஊதிப் பெரிதாக்கி ப்ரொமோ வெளியிட்டிருக்கிறார்கள்.

மோசம்

மோசம்

டாஸ்கின் போது யாஷிகா எதிரணியினர் பக்கம் நின்று கொண்டு ஏமாற்றினார். அவரை தட்டிக் கேட்காமல் அவரை தடுத்து நிறுத்திய வைஷ்ணவி மீது கோபப்படுகிறார் ரித்விகா. இதை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை ரித்விகா. ஐஸ்வர்யா சும்மா சவுண்டு சரோஜா மாதிரி தேவையில்லாமல் கத்துவை நிறுத்தினால் எங்கள் காதுகளுக்கு நல்லது. தமிழ்நாட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்று விரும்பும் ஐஸ்வர்யா தமிழ் ரசிகர்களின் வெறுப்பை தான் இந்த நிகழ்ச்சி மூலம் சம்பாதித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X