என் வாழ்க்கையில் எந்த நல்லதும் நடக்கல.. அந்த வலி மனசுக்குள்ள புதைஞ்சு இருக்கு.. கண்கலங்கிய ப்ரீத்தி

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்யின் கல்லூரி காலத்து நண்பர்கள் வட்டாரத்தில் மிக முக்கியமானவர் நடிகர் சஞ்சீவ். விஜய்யின் ஆரம்பகால சினிமா பயணம் முதல் இன்று வரை நிழல் போல தொடர்ந்து வருகிறது இவர்களது நட்பு. சஞ்சீவ் ஒருபுறம் வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடங்களிலும், மறுபுறம் சின்னத்திரையில் டாப் சீரியல்களிலும், வெப் தொடர்களிலும் படு பிஸியாக நடித்து வருகிறார்.

இவருடைய மனைவி ப்ரீத்தியும் சின்னத்திரையில் பிரபலமான ஒரு நடிகையாக இருக்கிறார். இந்நிலையில், இந்த நட்சத்திர தம்பதியினர் அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது, தங்களின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த கசப்பான ரணங்கள் குறித்து ப்ரீத்தி மனம் திறந்து பேசிய விஷயங்கள் பார்ப்பவர் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது.

எந்த ஒரு நல்ல விஷயமும் நடக்கல: திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் தாய்மை அடையும் போது, அவளுக்குப் பல சுப காரியங்களைச் செய்து குடும்பத்தினர் கொண்டாடுவது வழக்கம். ஆனால், எனக்கு கர்ப்ப காலத்திலும் நடக்க வேண்டிய எந்தவொரு நல்ல விஷயமும் என் வாழ்க்கையில் நடக்கவே இல்லை. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், இரண்டு பிரசவத்தின் போதும் எனக்கு வளைகாப்பு நடக்கவே இல்லை, சீமந்தம் நடக்கல இல்லை. ஒரு பெண்ணாக அந்த அழகான தருணங்களை என்னால் அனுபவிக்க முடியாமல் போனது எனக்குள் ஆராத வடுவாக இருக்கிறது.

CM Vijay Preethi sanjeev
Photo Credit:

வயிற்றுப் பிள்ளையுடன்: அந்தக் கர்ப்ப காலத்தின் போது, எனக்குப் பக்கபலமாக இருக்க வேண்டிய என் அம்மாவோ, அப்பாவோ என்னுடன் இல்லை. என் கணவர் சஞ்சீவும் ஷூட்டிங், வேலை என்று பிஸியாக இருந்ததால் அவராலும் என்னுடன் இருக்க முடியவில்லை. ஒட்டுமொத்தமாக நான் அந்த நேரத்தில் தனிமையில் தான் இருந்தேன். மனசு தாங்க முடியாத அளவுக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம், யாரிடமும் பேச முடியாமல், என் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்த குழந்தையிடம் தான் என் கஷ்டங்களை அதிகம் சொல்லுவேன். அந்த வலி, ஏமாற்றம் எல்லாமே என் மனசுக்குள்ள இன்னைக்கும் அப்படியே புதைந்து கிடக்கு. நான் உள்ளுக்குள் எவ்வளவு உடைந்து போய் இருக்கேன் என்பதைக்கூட நான் யாரிடமும் சொல்லியது இல்லை என்று ப்ரீத்தி கண்ணீருடன் பேசினார்.

ப்ரீத்தி அழுதுகொண்டே பேச, பக்கத்தில் இருந்த சஞ்சீவ் குற்ற உணர்ச்சியோடும், சோகத்தோடும் கண்கலங்கி மனைவியை கட்டியணைத்து ஆறுதல் படுத்தினார். எப்போதும் கலகலப்பாகக் காணப்படும் சஞ்சீவ் - ப்ரீத்தி தம்பதியின் வாழ்க்கைக்குப் பின்னால் இப்படிப்பட்ட வலிகள் ஒளிந்திருப்பதை பார்த்த ரசிகர்களும் சற்று கலங்கிப்போனார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X