ஆயுத பூஜை ஸ்பெஷல்: விஜய் டிவியில் நஸ்ரியா, அட்லி பங்கேற்கும் ‘காபி வித் டிடி’

சென்னை: வாரந்தோறும் ஞாயிறு இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி காபி வித் டிடி. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, செல்லமாக டிடி.

இந்த வாரம் ஆயுத பூஜை ஸ்பெஷலாக ராஜாராணிப்ட இயக்குநர் அட்லியும், நடிகை நஸ்ரியாவும் பங்கு பெற இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான முன்னோட்ட காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன. அதைப் பார்க்கும் போதே நிகழ்ச்சியைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது.

டிடினாலே ஜாலி தான்...

டிடினாலே ஜாலி தான்...

பொதுவாகவே டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. அந்தவகையில் இந்த நிகழ்ச்சியும் கலகலப்பாகவே இருக்கும் என்பதை முன்னோட்டக் காட்சிகளே நிரூபணம் செய்கின்றன.

அட்டகாசமான வரவேற்பு...

அட்டகாசமான வரவேற்பு...

நஸ்ரியாவை அறிமுகப் படுத்தும் போதே அழகிய கண்களை உடைய நஸ்ரியா என அழைக்கிறார் டிடி.

ஷாரூக்குடன் காபி...

ஷாரூக்குடன் காபி...

அதில், யாருடன் காபி சாப்பிட உங்களுக்கு ஆசை என டிடி நஸ்ரியாவிடம் கேட்கிறார். அதற்கு நஸ்ரியா ஷாரூக்குடன் என பதிலளிக்கிறார்.

அட்லியுடன் லைம் ஜூஸ்....

அட்லியுடன் லைம் ஜூஸ்....

உடனே, அட்லி ஏதோ சொல்ல வர, ‘என்ன உங்க பேரைச் சொல்லனுமா? சர், உங்க கூட வேணும்னா லைம் ஜூஸ் குடிக்கறேன். அவர் கூட காப்பி என கலாய்க்கிறார் நஸ்ரியா.

விஷம் வேண்டும்....

விஷம் வேண்டும்....

இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் டிடி உடனே அதிரடியா ‘நான் இப்போ விஷம் குடிக்கப் போறேன்' என கவுண்டர் கொடுக்கிறார்.

கலகலப்பான நிகழ்ச்சி....

கலகலப்பான நிகழ்ச்சி....

ஒரு பானைச் சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சிகளே நிகழ்ச்சியின் கலகலப்பை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X