Tamil Selvi serial: கல்லூரி வார்டன் குணத்துல.. பேட்ட ரஜினி மாதிரி இருக்கணும்!

சென்னை: சன் டிவியின் தமிழ்செல்வி சீரியலில் தமிழ்செல்வி கிராமத்தில் படிச்ச பொண்ணு. கல்லூரிக்கு வந்ததும் எல்லாமே அவளுக்கு வித்தியாசமா தெரியுது.

கல்லூரியில் இருக்க பிடிக்காமல் ராத்திரியோட ராத்திரியா வீட்டுக்கு கிளம்பி வந்துடறா. படிக்க போக வேணாம் கல்யாணம் பண்ணிடலாம்னு மறுபடியும் வீட்டார் முடிவு எடுக்க...

தமிழ் செல்வி பாட்டி எல்லாத்துக்கும் எடுத்து சொல்லி, தமிழ் செல்வி மறுபடியும் படிக்கட்டும்னு சொல்லித் தராங்க.

வார்டன் கல்லூரியில்

வார்டன் கல்லூரியில்

கல்லூரி ஹாஸ்டலில் இருந்து தமிழ்செல்வி காணாமல் போனதால், தன் மீது கெட்ட பேர் வந்திரும்னு வார்டனுக்கு கவலை. தமிழ் செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். பொம்பளை புள்ளையாச்சே...எத்தனை பேருக்கு பதில் சொல்லணும் என்கிற கவலை அவங்களுக்கு.

ஓடிப் போறதுன்னா

ஓடிப் போறதுன்னா

அந்த கோவத்துல,ஆற்றாமையில இதுங்க எல்லாம் எதுக்கு படிக்க வரேன்னு கிளம்பி வந்திருதுங்க. எவனோடயாவது ஓடிப் போகணும்னா ஓடிப்போய் ரெண்டு புள்ளைய பெத்து போட்டு குடும்பத்தை நடத்த வேண்டியதுதானே ..என் உசிரை எடுக்க எதுக்கு வருதுதுங்கன்னு திட்டறார்.

வேணாம் தமிழ்செல்வி

வேணாம் தமிழ்செல்வி

தமிழ் செல்வி இனிமே இந்த காலேஜுக்கு வேணாம்... அவளை சேர்த்துக்கிட்டா மத்த மாணவிகள் தன்னை மதிக்க மாட்டாங்கன்னு தமிழ்செல்வி மேல திருட்டு பட்டம் கட்ட, அவளோட பேக்கில் தண்ணோட நெக்லஸை வச்சுட்டு, நகையைத் திருடிட்டதா பழி போடறாங்க. மதிப்புக்கு உரிய வார்டன் அம்மா.

வார்டனுக்கு பாடம்

வார்டனுக்கு பாடம்

வார்டனுக்கு பாடம் புகட்டற மாதிரி அவங்க தொலைச்சுட்டு போன பர்ஸை எடுத்துட்டு வந்து, இதுல உங்க போட்டோ இருந்துச்சு மேடம்... அதான் எடுத்துட்டு வந்தேன்.எங்களுக்கு பணம் நகை மேல என்னிக்கும் ஆசை வந்தது இல்லை மேடம்னு சொல்றா தமிழ்செல்வி. ஆனா,பாருங்க.. தமிழ்செல்வி பையில் போட்ட நகையை அவளோட ரூம் தோழிகள் தமிழ்செல்வியைக் காப்பாத்த நகையை எடுத்து மறைச்சு வச்சுடறாங்க.

இளகிய வார்டன்

இளகிய வார்டன்

மனம் இளகிய வார்டன், இதுல எனக்கு என் அப்பா கடைசியா எழுதின லெட்டர் இருக்கும்மா.அதை நான் பொக்கிஷமா பாதுகாத்து வச்சுருக்கேன்... இந்த லெட்டர் கிடைச்சது உன்னாலதாம்மா.. .என்னை மன்னிச்சுரு.. உனக்கு திருடி பட்டம் கட்ட நினைச்சேன்..என்னை மன்னிச்சுரு தமிழ்செல்வி.

இனிமே எந்த மாணவி கிட்டயும் இப்படி நடந்துக்க மாட்டேன்... இதுவரைக்கும் நான் நல்ல வார்டனாத்தான் இருந்திருக்கேன்.. இனியும் அப்படித்தான் இருப்பேன்மான்னு சொல்றாங்க...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X