சன் டிவியின் பிரபலமான 2 சீரியல்கள்....கொத்தாக அள்ளிய கலர்ஸ் தமிழ் சானல்

சென்னை : கலர்ஸ் தமிழ் சேனல் துவங்கப்பட்டு சில ஆண்டுகளே ஆன நிலையில், சேனலை பல வகையிலும் சிறப்பாக்க பல நடவடிக்கைகளை அந்த சேனல் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக சன் டிவியில் பிரபலமாக மக்கள் ஆதரவு பெற்று வெற்றி நடைப்போட்ட 2 சீரியல்களை கொத்தாக தூக்கியுள்ளது.

சேனல்களின் போட்டி

சேனல்களின் போட்டி

தற்போது சேனல்கள் அதிகரித்து காணப்படுகிறது. சேனல்களுக்கிடையில் போட்டியும் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் துவங்கப்பட்டு சில ஆண்டுகளே ஆன நிலையில், கலர்ஸ் தமிழ் சேனல் சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சேனலுக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்

அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்

ரசிகர்களை கவரும்வகையில் இந்த சேனலில் சிறப்பான நிகழ்ச்சிகள், புதிய புதிய சீரியல்கள், புதிய படங்கள் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை கலர்ஸ் தமிழ் களமிறக்கி வருகிறது. இந்த சேனலின் சீரியல்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. இந்த சீரியல்களுக்காகவே ஏராளமான ரசிகர்கள் இந்த சேனலை பார்த்து வருகின்றனர்.

புதுப்புது சீரியல்கள்

புதுப்புது சீரியல்கள்

ரசிகர்களின் நாடித் துடிப்பை உணர்ந்து புதுப் புது சீரியல்களையும் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. வள்ளித் திருமணம், இது சொல்ல மறந்த கதை, மீரா உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. குஷ்பூவும் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மீரா தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கலர்ஸ் தமிழில் கோலங்கள், தென்றல்

கலர்ஸ் தமிழில் கோலங்கள், தென்றல்

போட்டிக்கு போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் களைகட்டி வருகின்றன. இந்நிலையில் சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தும்வகையில் தற்போது சன் டிவியின் பிரபலமான சீரியல்களையும் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்ப உள்ளது. கோலங்கள் மற்றும் தென்றல் சீரியல்களை வரும் 16ம் தேதி முதல் பிற்பகல் 1 மற்றும் 2 மணியில் ஒளிப்பரப்ப உள்ளது.

சன் டிவியின் பிரபல தொடர்கள்

சன் டிவியின் பிரபல தொடர்கள்

இந்த இரு சீரியல்களும் சன் டிவியின் மிகவும் பிரபலமான சீரியல்கள். தற்போதும் இந்த சீரியல் குறித்து பேசினால் மலரும் நினைவுகளில் ரசிகர்கள் சென்று விடுவார்கள். இந்நிலையில் இந்த சீரியலை மீண்டும் மதிய நேரத்தில் ஒளிபரப்ப உள்ளது சீரியல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ரசிகர்களை கவரும் பழைய சீரியல்கள்

ரசிகர்களை கவரும் பழைய சீரியல்கள்

இந்த இரண்டு சீரியல்களும் ஆண்டுகளை கடந்து சன் டிவியில் ஒளிப்பரப்பட்டு வந்த தொடர்கள். தற்போது இந்தத் தொடர்கள் மீண்டும் ஒளிப்பரப்பாக உள்ளன. ஏற்கனவே தெய்வமகள் உள்ளிட்ட தொடர்கள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில் கலர்ஸ் தமிழ் சேனலும் தற்போது இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Recommended Video

இந்த மாதிரி படத்தை புது டைரக்டர் எப்படி Handle பண்ணுவாரு னு யோசிச்சேன் |Ranga| Sibiraj
சிறப்பான தொடர்கள்

சிறப்பான தொடர்கள்

தேவயாணி நடிப்பில் கோலங்கள் தொடர் மற்றும் தீபக் நடிப்பில் தென்றல் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த தொடர்கள். சீரியலிலும் ரசிகர்களை அதிகமாக பெற முடியும் என்பதை தேவயாணி மூலம் கோலங்கள் தொடர் நிரூபித்தது. இதேபோல 3 பெண்களை கொண்டு சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது தென்றல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X