Naagini 6: கலர்ஸ் தமிழில் 100 எபிசோட்களை நிறைவு செய்த நாகினி 6 தொடர்.. ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை: அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது கலர்ஸ் தமிழ் சேனல்.
அந்த வகையில் திங்கள் முதல் வெள்ளிவரை இந்த சேனலில் நாகினி 6 தொடர் தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்த தொடர் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒரு மணிநேர எபிசோடாக தினந்தோறும் ஒளிபரப்பாகி வருகிறது.

நாகினி 6 தொடர்: சின்னத்திரையில் அதிகமான கவனத்தை பெற்ற தொடர்களில் ஒன்று நாகினி. இந்தத் தொடரின் 6வது சீசன் தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. வாரயிறுதி நாட்களில் இரவு 8.00 மணிக்கு இந்த தொடர் ஒருமணிநேர தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரின் விறுவிறுப்பான கதைக்களம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்வகையில் அமைந்து வருகிறது. அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளை அரங்கேற்றி வருகிறது.
பிராத்னாவிற்காக பூஜை: பிராத்னா மகா சேஷ் நாகினி ஆக வேண்டும் என்பதற்காக ரிஷப் மற்றும் ப்ரதா பூஜை செய்ய முடிவெடுத்து அதை நடத்துகின்றனர். அவர்களின் பூஜையில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா என்பதையே நாகினி 6 தொடர் கதைக்களமாக கொண்டுள்ளது. தன்னுடைய இந்த சக்தியால் ருத்ராவிற்கு ஆபத்து ஏற்படுவதாக பிராத்னா கனவு கண்ட நிலையில், இந்த பூஜையிலிருந்து அவள் பின்வாங்குவாளா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திகிலுக்கு உள்ளான பிராத்னா: மேலும் ப்ரதா மற்றும் ரிஷப் இருவரும் கொல்லப்பட்டதை அறிந்தும் பிராத்னா அதிகமாக மனஉளைச்சலுக்கும் திகிலுக்கும் உள்ளாகிறாள். இதையடுத்து அவள் என்ன மாதிரியான முடிவெடுப்பாள் என்பதாக இந்த சீரியல் கதைக்களங்களை கொண்டுள்ளது. பிராத்னாவிற்கு அவளுடைய கடந்த காலம் குறித்த நினைவு திரும்பும்வகையில் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் கலர்ஸ் தமிழ் சேனலில் இந்தத் தொடர் 100வது எபிசோடை ஒளிபரப்பியுள்ளது.
ஒருமணிநேர எபிசோட்: இந்த தொடரை கலர்ஸ் தமிழில் 1 மணிநேர எபிசோடாகவும் ஜியோ சினிமாவில் டிஜிட்டல் முறையில் 30 நிமிட எபிசோடாக பார்க்க முடியும். இந்த தொடரை பாலாஜி டெலிஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஏக்தா கபூர் தயாரித்துள்ளார். ரீமேக்காக ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த தொடரில் தேஜஸ்வி பிரகாஷ், சிம்பா நாக்பால், ஊர்வசி தோலாகியா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
100வது எபிசோட்: சூப்பர் நேச்சுரல் மற்றும் த்ரில்லர் பேன்டஸி ஜானரில் ரசிகர்களை கவர்ந்துவரும் நாகினி 6 தொடரை சாந்த்ராம் சிங் என்பவர் இயக்கி வருகிறார். இந்தக் கதையை மிருணாள் ஜா உருவாக்கியுள்ளார். லலித் சென் இசையமைத்துள்ள இந்தத் தொடர் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. வூட் தளத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் ரிஷப்பின் அம்மாவாக பிரபல நடிகை சுதா சந்திரன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











