Lakshmi narayana namo namaha: ஹயக்ரீவன் கலந்த விஷம்.. பாதிப்பில் நாராயணன்.. களமிறங்கும் லட்சுமி!
சென்னை: சன்டிவி, கலர்ஸ் தமிழ் என அடுத்தடுத்த சேனல்க்ளில் ஆன்மிக மற்றும் புராணத் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நம்முடைய புராணங்கள் குறித்த எந்தவிதமான புரிதலும் இலலாமல் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு இந்தத் தொடர்கள் மிகச்சிறப்பான அனுபவங்களை கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகவும் பிரமாண்டமாகவும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது லட்சுமி நாராயணா நமோ நமஹ என்ற ஆன்மிகப் புராண தொடர். இந்தத் தொடர் அடுத்தடுத்த எபிசோட்களில் மிகச்சிறப்பாக அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

ஆன்மிக புராண தொடர்கள்: நம்முடைய புராணங்கள் அதன் காரணங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் இளைய தலைமுறையினருக்கு கிடைக்காமலே இருந்தது. ராமாயணம், மகாபாரதம் என புராண ஆன்மிக தொடர்களை பார்த்த தலைமுறையினர் அதன் காட்சி அமைப்புகள் மற்றும் பிரம்மாண்ட செட்களை தற்போதும் மறந்திருக்க முடியாது. வாரந்தோறும் இந்த தொடர்கள் ஒளிபரப்பாகும் நாளுக்காக காத்திருந்து பார்த்த இந்த தலைமுறையினரின் உற்சாகம் தற்போது இந்த தலைமுறையினருக்கும் கிடைத்து வருகிறது. ராமாயணம் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மிக அதிகமான டிஆர்பியை பெற்று வருகிறது.
லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடர்: அந்த வகையில் கலர்ஸ் தமிழ் சேனலும் அடுத்தடுத்த ஆன்மிக புராண தொடர்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது லட்சுமி நாராயணா நமோ நமஹ என்ற ஆன்மிக புராண தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரின் இந்த வார எபிசோட்கள் மிகவும் விறுவிறுப்பாக காணப்படுகின்றன. தன்னுடைய தம்பியை அழித்த நாராயணரை பழிவாங்க அசுரன் ஹயக்ரீவன் அனந்தசாகரத்தில் விஷம் கலந்து விடுகிறார். இதனால் நாராயணர் மட்டுமில்லாமல் அவரை சார்ந்துள்ள ஜீவராசிகளும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் அனைவரையும் காப்பாற்ற லட்சுமி எடுக்கும் முயற்சியை இந்த வார எபிசோட்கள் காட்சிப்படுத்த உள்ளன.
விஷம் கலந்த ஹயக்ரீவன்: லட்சுமியை அபகரிக்க சென்று நாராயணரால் அழிக்கப்படுகிறார் ஹயக்கீரிவனின் தம்பி. இதையடுத்து நாராயணரை பழிவாங்க சபதம் ஏற்கிறான். அதற்கான சதித்திட்டம் தீட்டி, கொடிய விஷத்தை நாராயணர் இருக்கும் அனந்தசாகரத்தில் கலந்து விடுகிறார். அவனது தந்தை மாரீசனும் தாயும் தடுத்து புத்திமதி புகட்ட முயன்றும் கேட்காத அவன் கலந்த இந்த நஞ்சால் பிரபஞ்சமே திணறுகிறது. மொத்த ஜீவராசிகளும் அழிவிலிருந்து தப்பிக்க முடியாமல் போராடுகிறார்கள். அந்த கொடிய விஷத்தினால் நாராயணரும் பாதிப்படைகிறார். இதனை காணும் லட்சுமி தவிக்கும் நிலையில், அவருக்கு ஆதிசக்தி உபாயம் கூறுகிறார்.
லட்சுமி நடவடிக்கை: இதையடுத்து நேராக லட்சுமி கோமாதாவிடம் செல்கிறார். கோமாதாவிற்கு பதிலாக நந்தினி என்கிற பசு வந்து என்ன உதவி வேண்டும் என்று கேட்க, விஷத்தை முறிக்கும் அமுதத்தை கேட்கிறார் லட்சுமி. நந்தினி அமுதக்கலயத்தை தர, முதலில் நாராயணரை காப்பாற்ற லட்சுமி அமுதக்கலயத்துடன் கிளம்புகிறார். இதனிடையே நேரம் செல்ல செல்ல நாராயணரும் ஜீவராசிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் லட்சுமி அமுதக்கலயம் மூலம் கொடிய விஷத்தால் பாதிப்படைந்த நாராயணரையும் மற்ற ஜீவராசிகளையும் காப்பாற்றியது எப்படி என்பதாக இந்தவார எபிசோட்கள் காணப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











