ஹயக்கீரிவனை வதம் செய்து லட்சுமியை காத்த நாராயணர்.. கோபத்தில் லட்சுமி மேற்கொள்ளும் அதிரடி!
சென்னை: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 8 மணிக்கு லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. மிகவும் பிரம்மாண்டமாகவும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் வகையில் அடுத்தடுத்த சுவாரஸ்யமான காட்சிகளுடனும் இந்த தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது.
ஆன்மிக புராண தொடராக மாஸ் காட்டிவரும் லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடரை பார்க்க அதிகமான ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நமது புராண இதிகாசங்களை தெரிந்துக் கொள்ளவும் பிரம்மாண்டமான செட்களை பார்க்கவும் ரசிகர்களின் ஆர்வம் குறிப்பாக சிறிய வயது ரசிகர்களின் ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது.

லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடர்: கலர்ஸ் தமிழ் சேனலில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள், தொடர்கள் சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில் லட்சுமி நாராயணா நமோ நமஹ புராண மற்றும் ஆன்மிக தொடர், கடந்த சில வாரங்களாக மிகச்சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த தொடரின் பிரம்மாண்டமான செட்களை பார்க்கவும் நமது புராண இதிகாசங்கள் குறித்து தெரிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டிவரும் நிலையில், அதற்கேற்ப இந்த தொடர், ஏராளமான ரசிகர்களை அடுத்தடுத்த எபிசோட்களால் கவர்ந்து வருகிறது. இந்த வாரமும் சிறப்பான காட்சிகளால் ரசிகர்களை கவர காத்திருக்கிறது.
ஹயக்கிரீவனை வதம்செய்யும் நாராயணர்: இந்த வார எபிசோடில் நாராயணரை பழிவாங்க ஆக்ரோஷத்துடன் களமிறங்கும் அசுரன் ஹயக்ரீவன், நாராயணர் தோற்றுவித்த புதிய உலகத்திற்குள் நுழைவதாக காணப்படுகிறது. அங்கு சிவன் மற்றும் தேவர்கள் முன்னிலையில் நாராயணரை யுத்தத்திற்கு அழைக்கும் ஹயக்ரீவன், லட்சுமியை தனக்கானவள் என்று கூறி நாராயணரை ஏளனப்படுத்துகிறான். இந்த வார்த்தையை கேட்கும் லட்சுமி ஆத்திரமடைந்து நாராயணரிடம் அசுரன் ஹயக்ரீவனை வதம் செய்யுமாறு வேண்டுகிறார். நாராயணர் அம்பு தொடுத்து ஹயக்ரீவனின் தலையை கொய்யும் நிலையில், தலை தானாக பழையபடி கழுத்துடன் வந்து இணைந்து கொள்கிறது.
கண்கலங்கும் லட்சுமி: இதனால் நாராயணர் திணற, அப்போது சிவன் நாராயணரிடம் ஹயக்ரீவன் ஆதிசக்தியிடம் வரம் வாங்கி வந்தவன், அவனை அவ்வளவு சீக்கிரத்தில் அழிக்க முடியாது என்று கூறுகிறார். இந்த சமயத்தில் ஹயக்ரீவன் அம்பு எய்து, நாரயணரின் தலையை கொய்து விடுகின்றான். உடனே தலையில்லாத நாராயணரை பார்த்து கேலி செய்து சிரிக்கிறான். லட்சுமியிடம் தனக்கு தன்னால் மட்டுமே அழிவு என்றும் வேறு எவராலும் தன்னை அழிக்க முடியாது என்றும் தன்னோடு வரும்படியும் கூறுகிறார். லட்சுமியை இழுத்துச் செல்லும் நோக்கத்தில் அவர் முன்பு செல்கிறான். லட்சுமி அழுது கண்கலங்குகிறார்.

அசுர குலத்தை அழிக்க லட்சுமி அதிரடி முடிவு: சிவன் உள்ளிட்ட தேவர்கள் திகைத்து நிற்க,அப்போது நாராயணர், குதிரைத்தலை கொண்ட ஹயக்ரீவ அவதாரம் எடுத்து ஹயக்ரீவனை அழித்து லட்சுமியை காப்பதாக அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்படுகின்றன. இதையடுத்து அசுர குலத்தை அழிக்க லட்சுமி கோபத்துடன் செல்ல முற்பட, நாராயணர் தடுப்பதாகவும் காணப்படுகிறது. இதனிடையே அடுத்தக்கட்டமாக நாராயணரை நீங்கும் நிலை லட்சுமிக்கு ஏற்படுவதாகவும் தனித்திருக்கும் லட்சுமியை சமுத்திரராஜன் அழைத்து செல்வதாகவும் காட்சிகள் காணப்படுகின்றன.
சமுத்திரராஜனின் சூழ்ச்சி: இதையடுத்து தன்னை பழிவாங்கவே லட்சுமியை கடலுக்கு நயவஞ்சகமாக சமுத்திரராஜன் அழைத்து சென்றதை அறித்து லட்சுமியை விடுவிக்கும்படி நாராயணர் கேட்கிறார். சமுத்திரராஜன் முடியாது என்று கூற, உடனே பாற்கடலை கடைந்து தான் லட்சுமியை மீட்பேன் என்று நாராயணர் சபதமிடுகிறார். சமுத்திரராஜனும் அவரை எதிர்த்து சபதமிடுவதாக அடுத்தடுத்த எபிசோட்களை காணப்படுகிறது. இப்படி பல திருப்பங்களுடன் இந்த வார லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.


Click it and Unblock the Notifications











