Lakshmi narayana namo namaha: பிரளயத்தை உருவாக்கும் ஹயக்கிரீவன்.. மச்ச அவதாரம் எடுக்கும் நாராயணர்!
சென்னை: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் குறுகிய காலத்திலேயே அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ள ஆன்மிக தொடர் லட்சுமி நாராயணா நமோ நமஹ. மிகவும் பிரமாண்டமாகவும் காண்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு இந்தத் தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது
ஆதி சக்தியிடம் வரம் பெற்ற அசுரன் ஹயக்ரீவன் நாராயணர் மற்றும் லட்சுமியை அழிக்கும் நோக்கத்துடன் பிரளயத்தை தோற்றுவிக்கிறார். இதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் வகையில் நாராயணர் களமிறங்குகிறார். ஆனால் அவருக்கும் என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்படுவதாக வரும் வாரத்தில் எபிசோட்கள் காணப்படுகின்றன.

லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடர்: ஆதிசக்தியிடம் வரம் பெற்று வந்த அசுரன் ஹயக்ரீவன் சர்வநாச அஸ்திரத்தை ஏவி பிரபஞ்சத்தில் அதிபயங்கரமான பிரளயத்தை தோற்றுவிக்கிறான். இதை எதிர்கொள்ள முடியாமல் ஜீவராசிகளும், மக்களும், தேவர்களும் அழிகின்றனர். லட்சுமியும் நாராயணரும் இந்த விஷயத்தில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதாக அடுத்த வார எபிசோட்கள் காணப்படுகின்றன. வைகுண்டத்தில் நாராயணருக்கும் லட்சுமிக்கும் விவாகம் நடந்த நிலையில் அதை தடுத்து நிறுத்த முடியாத அசுரன் ஹயக்ரீவன் நாராயணரையும் லட்சுமியையும் விரைவில் அழிப்பேன் என்று சபதம் எடுக்கிறான்.
குழம்பும் லட்சுமியும் நாராயணரும்: ஹயக்ரீவனின் தந்தை கஷ்யப்ப முனிவரும் தாய் கத்ருவும் ஹயக்ரீவனை தடுத்து அறிவுரை கூறியும் கேட்காமல் தான் பெற்ற தவவலிமையால் சர்வநாச அஸ்திரத்தை வரவழைத்து பிரபஞ்சத்தில் பெரும்பிரளயத்தை உண்டாக்குகிறான். இதைக்கண்டு அண்டசராசரமே நடுநடுங்குகிறது. ஹயக்ரீவன் தோற்றுவித்த பிரளயத்தை…எதிர்கொள்ள முடியாமல் ஜீவராசிகளும், மக்களும், தேவர்களும் அழிகின்றனர். லட்சுமியும் நாராயணரும் செய்வதறியாமல் குழம்பித் தவிக்கின்றனர். சிவன், பிரம்மா, நாரதர் மற்றும் தேவாதிதேவர்களும் பிரளயத்தை முறியடிக்க நாராயணர் என்ன செய்யப் போகிறார் என்று காத்திருக்கின்றனர்.
தேவசிற்பி உருவாக்கும் புதிய கப்பல்: இதையடுத்து தேவசிற்பி மனுவிடம் புதிய கப்பலை நிர்மாணிக்கும்படி நாராயணர் கூறுகிறார். பிரளயத்தின் அழிவிலிருந்து மீட்டு புது உலகை படைப்பதாக சொல்கிறார். மனுவும் அதன்படியே செய்து, அவரது உத்தரவுப்படி அந்தக் கப்பலில் பிரளயத்தினால் தத்தளிக்கும் தேவர்களையும் கஷ்யப்ப முனிவரையும் ஏற்றுகிறான். மேலும் நாராயணர் படைக்கப்போகும் புது உலகிற்கு பிரளயத்தில் எஞ்சிய ஜீவராசிகளையும் தாவர வித்துக்களையும் ஏற்றிக்கொண்டு புறப்படுகிறான். இந்தக் கப்பலையில் அழிக்க ஹயக்ரீவன் முயல உடனே லட்சுமி நாராயணர் மச்சாவதாரம் எடுத்து அந்தக் கப்பலை காப்பாற்றுகிறார்..
மச்ச அவதாரம் எடுக்கும் நாராயணர்: அதேநேரம் அஷ்டலட்சுமியாய் தேவர்களுக்கு காட்சி கொடுத்த லட்சுமி தன் கணவர் நாராயணரின் எண்ணத்தை நிறைவேற்ற புது உலகத்தை படைக்கிறார். பிரளயத்திலிருந்து அந்த புது உலகை காப்பாற்ற சிவனே நேரடியாகச் சென்று தாங்கிப் பிடிக்கிறார். லட்சுமி தன் தீவிர முயற்சியில் பிரளயத்தின் நீரினால் தத்தளிக்கும் அந்த கப்பலை புது உலகின் கரையில் சேர்க்கிறார். இது தெரியாமல், ஹயக்ரீவன் தன் பிரளயத்தினால் நாராயணரும் தேவர்களும் ஜீவராசிகளும் அழிந்து விட்டதாக நினைத்து அசுரர்களின் புது உலகை படைக்கும் கொண்டாட்டத்தை தொடங்குவதாக இந்த வார எபிசோடில் காணப்படுகிறது. ஆயினும் உண்மை தெரிந்து நாராயணருடன் ஹயக்ரீவன் யுத்தம் செய்வதாகவும் அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்படுகின்றன. விறுவிறுப்பான இந்த தொடரை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications











