காதல் -அமானுஷ்யம் நிறைந்த மோகினி ஆட்டம் ஆரம்பம் தொடர்.. ரசிகர்களை கவரும் அடுத்தடுத்த எபிசோட்கள்!
சென்னை: கலர்ஸ் தமிழ் சேனல் அடுத்தடுத்து புராண, இதிகாச தொடர்கள் மற்றும் திரில்லர் பாணியிலான தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மோகினி ஆட்டம் ஆரம்பம் என்ற புதிய சீரியல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. சிறப்பான கதைக்களத்தில் அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களை இந்த டப்பிங் சீரியல் கொடுத்து வருகிறது.
இந்த வார தொடரில் மந்திர சாம்ராஜ்யத்தில் சிக்கும் நிஷாந்தியை மோகன் காப்பாற்றும் சூழலில், இருவரும் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். ஷவாகாவிற்கு மோகினியாக மாறும் வாய்ப்பையும் மகா அசுரன் வழங்குவதாகவும் காணப்படுகிறது. தினந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

மோகினி ஆட்டம் ஆரம்பம் தொடர்: கலர்ஸ் தமிழ் சேனலில் அடுத்தடுத்து நிகழ்ச்சிகள், சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. புராண, இதிகாச தொடர்களையும் திரில்லர் பாணியிலான தொடர்களையும் இந்த சேனல் அடுத்தடுத்து ரசிகர்களுக்கு வழங்கிவரும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் மோகினி ஆட்டம் ஆரம்பம் என்ற புதிய திரில்லர் பாணியிலான தொடர் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதன் அடுத்தடுத்த காட்சி அமைப்புகள், ஸ்கிரீன்பிளே ஆகியவை ரசிகர்களை வெகு சிறப்பாக கட்டி போட்டு வருகிறது.
டப்பிங் சீரியல்: டப்பிங் சீரியலாக இருந்தாலும் இதன் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த வாரமும் மோகினியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அடுத்தடுத்த எபிசோட்களில் நிஷாந்தி, மோகன் காம்பினேஷன் காட்சிகள் சிறப்பாக அமையவுள்ளன. மந்திர சாம்ராஜ்யத்தில், நிஷாந்தி மலர் புதர்களால் பிணைக்கப்பட்டு, உதவிக்காக காத்திருக்கையில், மஹா அசுரனின் சதியையும் எதிர்கொண்டு, மோகன் நிஷாந்தியை மரணத்தின் பிடியிலிருந்து மீட்கிறான்.

மகா அசுரனின் சதி: இதையடுத்து அங்கு வரும் ஒரு மாய மனிதர் மந்திர சாம்ராஜ்யத்திலிருந்து தப்பிப்பது இருவருக்கும் சாத்தியமில்லை என்று எச்சரிக்கிறார். தொடர்ந்து இதிலிருந்து தப்பிக்க நிஷாந்திக்கும் மோகனுக்கும் மகா அசுரன் ஒரு சதி ஒப்பந்தத்தை வழங்குகிறார், அதாவது, மோகனை கைவிட்டால் நிஷாந்தி சக்தியுடன் வாழ முடியும், அதேபோல, நிஷாந்தியை விட்டு விலகினால் மோகனுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்கிறார். ஆனால் இருவரும் இந்த சதியை மறுத்து, மகா அசுரனின் சிலையை தேட செல்வதாக இந்த வார எபிசோட்கள் காணப்படுகின்றன.
மோகனை பாதுகாக்கும் நிஷாந்தி: ஆனால், மகா அசுரனின் தீய நோக்கங்களை உணர்ந்து, நிஷாந்தி மோகனை பாதுகாக்க தன்னுடைய துணிச்சலான முடிவுகளை எடுக்கிறாள். மகா அசுரன், ஷலாகாவுக்கு அவளுடைய நித்திய இளமையை அளிக்க, மோகினியாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் இந்த வாரத்தில் இந்தத்தொடரில் புதிய திருப்பம் காணப்படுகிறது. எதிர்பாராத திருப்பங்களுடன் இவர்கள் இருவரின் கதை எப்படி முடிவடையும்? 'மோகினி ஆட்டம் ஆரம்பம்' தொடரின் திருப்பங்களுடன் கூடிய எபிசோட்கள் ரசிகர்களை அடுத்தடுத்து கவரும் என்று எதிர்பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications











