Colors tamil TV serial: இறுதி ஆபரணத்திற்கான சண்டை.. வெள்ளிக்கிழமை சிறப்பு ஒளிபரப்பு!

சென்னை: கலர்ஸ் தமிழ் சேனலில் அடுத்தடுத்து புராண. இதிகாச தொடர் மட்டுமில்லாமல் அமானுஷ்யம் நிறைந்த தொடரான மோகினி ஆட்டம் ஆரம்பம் என்ற தொடரும் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஷலாகா என்ற சூனியக்காரியின் யாகத்திற்காக அடுத்தடுத்து ஆண்கள் பலியிடப்படுகின்றனர்.

இதில் கடைசி இலக்காக மோகன் உள்ள நிலையில் அவரை காக்கும் வகையில் தியா அடுத்தடுத்து செயல்படுவதை கதைக்களமாக இந்த சீரியல் கொண்டுள்ளது. ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் மோகினி ஆட்டம் ஆரம்பம் தொடரை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த வார எபிசோட்களும் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையிலும் அதிகமான தந்திர காட்சிகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.

televisiion colors tamil channel mohini aattam aarambam serial

மோகினி ஆட்டம் ஆரம்பம் தொடர்: கலர்ஸ் தமிழ் சேனலில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது மோகினி ஆட்டம் ஆரம்பம் தொடர். காதல் மற்றும் அமானுஷ்யம் இரண்டும் மோதிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை கதைக்களமாகக் கொண்டு இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. டப்பிங் சீரியலாக இருந்த போதிலும் இந்த சீரியலை பார்க்க ஏராளமான ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காதல் அனைத்தையும் வெல்லும் ஆனால் ஒரு சூனியக்காரியின் சூழ்ச்சியை வெல்லுமா என்பதற்கு விடையாகியுள்ளது மோகினி ஆட்டம் ஆரம்பம்.

மந்திரக்காரியின் சூழ்ச்சி: இந்த கற்பனை கதையில் ஷலாகா என்ற தீய மந்திரகாரியின் சூழ்ச்சிகளுக்கு எதிராக நடக்கும் போராட்டமே சுவாரசியங்கள் நிறைந்த அடுத்தடுத்த எபிசோட்களாக ஒளிபரப்பாகி வருகின்றன. 16 அதிசய ஆபரணங்கள் மற்றும் நிரந்தர அழகை, இளமையை பெற முயற்சிக்கிறார் ஷலாகா. 16 ஆபரணங்களை அடைய ஒவ்வொரு பதிவிரதையின் கணவரையும் யாகத்திற்கு பலி கொடுக்கிறார். அதனால் அவரது தீய சக்திகள் வலுப்பெறுகின்றன. இந்நிலையில் அவரது 16வது குறியாக மோகன் காணப்படுகிறார். இறுதி ஆபரணத்தை பெரும் இந்த முயற்சியில் அவருக்கு எதிராக மோகனின் சிறுவயது தோழியும் காதலியுமான தியா போராடுகிறார்.

சந்தேகத்தை விதைக்கும் ஷலாகா: இவர்கள் இருவருக்கும் எதிரான இந்த போராட்டத்தை விறுவிறுப்பாகவும் திகில் திருப்பங்களுடனும் கலர்ஸ் தமிழ் சேனல் தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பி வருகிறது. இந்த வார எபிசோடில் ஷலாகா மோகனின் மனதில் சந்தேகத்தை விதைப்பதாக காணப்படுகிறது. இதனிடையே, இதையறியும் நிஷாந்தி ஷவாகாவுடன் மோதுகிறார். இதனிடையே மகா அசுரனின் கைதியாக அடிமை சந்தையில் நிஷாந்தி பெரும் துன்பங்களை அனுபவிக்கிறார். ஆனாலும் தன்னை விடுவிக்க மோகன் வருவான் என்று நம்பிக்கையில் இருக்கிறார்.

நிஷாந்தியை காக்க மோகன் சண்டை: இதனிடையே, அவளை காக்க மோகன் சந்தையில் நுழைவதாகவும் அரக்கனுடன் போரிடுவதாகவும் அடுத்தடுத்த எபிசோட்களில் காணப்படுகிறது. இதனிடையே 15 ஆபரணங்களை அடைந்த ஷலாகா, 16வது ஆபரணத்தை பெறும்வகையில் மோகனை பலி கொடுக்க முயற்சிக்கிறார். இதையடுதது ஷலாகாவின் முயற்சியை முறியடிக்கும்வகையில் தியாவும் நிஷாந்தியும் இணைந்து போராடுகின்றனர். இதன் அடுத்தடுத்த எபிசோட்களை வாரந்தோறும் ஒளிபரப்ப கலர்ஸ் தமிழ் சேனல் திட்டமிட்டுள்ளது.மேலும் வரும் வெள்ளிக்கிழமை இந்ததொடரில் சிறப்பு ஒளிபரப்பு தொடர்ந்து 2 மணிநேரங்கள் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.'

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X