சிவசக்தி திருவிளையாடல் தொடர்.. அரங்கேறும் சிவன் -பார்வதி திருமணம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
சென்னை: கலர்ஸ் தமிழ் சேனலில் அடுத்தடுத்து சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சேனலுக்கு டிஆர்பி-ஐ அதிகப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் இந்த சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிவசக்தி திருவிளையாடல் என்ற ஆன்மீக புராண தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம் முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் இந்த தொடரை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இதற்கு காரணமாக சீரியலின் செட் அமைப்புகள், நடிகர்கள் தேர்வு, சிஜி வேலைப்பாடுகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. தற்போது சிவன் மற்றும் பார்வதியின் திருமணம் தொடர்பான எபிசோட்கள் ஒளிபரப்பாக உள்ளன.

சிவசக்தி திருவிளையாடல் தொடர்: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து ரசிகர்களை கவரும் வகையில் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில் திங்கள் முதல் வெளி வரை தினந்தோறும் இரவு 7 மணிக்கு இந்த சேனலில் சிவசக்தி திருவிளையாடல் என்ற ஆன்மீக புராணத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. மிகவும் பிரம்மாண்டமாக ரசிகர்களை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரசியங்களோடு இந்த தொடர் தினந்தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றுவரும் இந்த தொடர் கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
சிவன் -பார்வதி திருமணம்: சிவசக்தி திருவிளையாடல் தொடருக்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை கொடுத்து வருகின்றனர். தற்போது இந்த தொடரில் சிவன் மற்றும் பார்வதியின் திருமணம் நடைபெற உள்ளது. அசுரர்களின் பல்வேறு சூழ்ச்சிகளை உடைத்தெறிந்து இந்த திருமணம் நடக்கஉள்ளது. முன்னதாக அசுர குல அரசன், தாரகாசுரன் சிவனிடம் இருந்து பெற்ற சிவ தனுசுவையும் அமரனாக வாழ்வதற்கான வரத்தையும் சிவனிடம் எப்படி பெற்றான் என்பது குறித்த சுவாரசியமான காட்சிகள் இந்த தொடரை மேலும் விருப்பமாக நடத்தி செல்கிறது. இது மட்டுமில்லாமல் சிவமைந்தனுக்கும் தாரகாசுரனின் மகன்களுக்கும் இடையே நிகழும் யுத்தத்தை நோக்கியும் இந்த கதைக்களம் நகர்ந்து வருகிறது.
மாயாஜாலம் நடத்தும் சிஜி வேலைகள்: இவை அனைத்துமே அடுத்தடுத்த திருப்பங்களுடன் விறுவிறுப்பான திரைக்கதையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சீரியல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பளபளப்பான செட் அமைப்புகள், நேர்த்தியான கேரக்டர் தேர்வுகள் மற்றும் மாயாஜாலம் நிகழ்த்தும் சிஜி வேலைகள் உள்ளிட்டவை ரசிகர்களை மிகப்பெரிய பிரம்மாண்டத்தில் ஆழ்த்தி வருகிறது. இவை கைலாயத்தையும் வானுலகததையும் ரசிகர்களின் கண்முன்னே காட்சிப்படுத்தி வருகிறது. இவை கொடுக்கும் வியப்பான அனுபவத்தில் ரசிகர்கள் புல்லரிப்பை உணர்ந்து வருகின்றனர்.
சிவபெருமான் திருவிளையாடல்: பார்வதியை என்னமாதிரியான திருவிளையாடல் செய்து சிவபெருமான் திருமணம் முடிக்கப் போகிறார் என்பது வரை இந்த தொடரின் கதைக்களம் நகர்ந்துள்ளது. முன்னதாக அரக்கன் தாரகாசுரனின் சூழ்ச்சிகளை தகர்த்து, கடும் தவம் செய்து சிவனின் மனதில் பார்வதி இடம்பெற்ற நிகழ்வையும் சுவாரஸ்யம் கலந்து மிகச்சிறப்பாக இந்த சீரியல் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. புராணங்கள் குறித்து தெரியாத இளம் தலைமுறையினருக்கும் இந்தத் தொடர் மிகச்சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications