நாராயணரின் ஆள் மாறாட்டம்.. அசுரனை வதம் செய்யும் சிவன்.. ரசிகர்களை கவர்ந்த சிவசக்தி திருவிளையாடல்!
சென்னை: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யமான எபிசோட்களை கொடுத்து வருகிறது சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிகப் புராண தொடர். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு இந்தத் தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது.
அனைத்து வகை ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வெற்றித் தொடராக கடந்த ஜூன் மாதம் முதல் இந்த தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் மூலம் நமது புராணங்களை இளைய தலைமுறையினரும் அறிந்துக் கொள்ள முடிவதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பிரம்மாண்ட செட்கள் மூலம் இந்த தொடர் மிகுந்த கவனம் பெற்று வருகிறது.

சிவசக்தி திருவிளையாடல் தொடர்: அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் மூலமாகவும் சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்துவருகிறது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி. இந்த சேனலில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிக புராண தொடர். திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் பல்வேறு சுவாரஸ்யங்களுடன் மிகவும் பிரம்மாண்டமான செட் அமைப்புகளுடன் உருவாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகிவரும் இந்த தொடரை அதிகமான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இதையடுத்து அடுத்தடுத்த சேனல்களில் ஆன்மிக புராணத் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
கவனம் பெறும் எபிசோட்கள்: இந்த தொடரின் இந்த வார எபிசோட்களும் மிகுந்த கவனத்தை பெறும்வகையில் அமைந்துள்ளன. புதிய அசுர அரசனாகப் பதவியேற்றுக் கொண்ட சங்கச்சூரன், சிவனை எதிர்த்து வெல்லும் நோக்கத்தைத் தீவிரமாக்க, அவனது மனைவி துளசி மேற்கொள்ளும் பதிவிரதா தர்மத்தால் சிவனாலும்கூட சங்கச்சூரனை வெல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. மும்மூர்த்திகளாலும் சங்கச்சூரனை வதம்செய்ய இயலாத நிலையில் சிவன், சங்கச்சூரனை வதம் செய்கிறார். இதற்கு நாராயணர் செய்யும் ஆள் மாறாட்டம் காரணமாக அமைகிறது. தனது தந்தையை, தனது அசுரகுல திரிபுரா அசுரர்களை பாசுபத அஸ்திரத்தால் சிவன் வதம் செய்ததால் சிவனை எதிர்க்கிறான் சங்கச்சூரன்.
அசுரனை வதம் செய்த சிவன் : அசுர மாதாவும் அசுர குருவும் தடுத்தும் சிவனைச் சண்டைக்கு அழைத்து வெல்ல முயல்கிறான் சங்கச்சூரன். அவனுடைய மனைவி துளசியின் பதிவிரதா தர்மம் அவனைக் கவசமாகக் காக்கிறது. இது ஊழியூழிக் காலமாக நடக்கும் யுத்தமாக மாறிவிடக் கூடாது என நினைக்கும் நாராயணர், துளசியின் பதிவிரதா தர்மத்தைக் கலைக்க, சங்கச்சூரனாக உருமாறி, அவளது பதிவிரதா தர்மத்துக்கு பங்கம் விளைக்கிறார். இதையடுத்து சிவனால், சங்கச்சூரன் வதம் செய்யப்படுகிறான். நாராணயரின் ஆள்மாறாட்ட த்தை அறியும் துளசி, தனது இறந்த கணவன் சங்கச்சூரன் உடலை மடியில் அள்ளிப்போட்டுக் கொண்டு சிவனிடம் நியாயம் கேட்கிறாள்.
நாராயணனுக்கு சாபம்: நாராயணர் செய்த தவறுக்கு துளசியையே அவருக்குத் தண்டனை தரச் சொல்கிறார் சிவன். துளசியும் நாராயணரைக் கல்லாக சபிக்கிறாள். இதனால் பிரபஞ்ச இயக்கம் தடுமாறுகிறது. நாராயணருக்கு சாப விமோச்சனம் தரச் சொல்லி துளசியிடம் சிவன் கேட்டுக்கொள்கிறார். இதையடுத்து நாராயணர் சாப விமோசனம் அடைந்தாரா? சிவன் கோயிலில் துளசி வழிபாடு இல்லாமல் போனதற்கும் பதிவிரதா தர்மம் குலைந்ததற்கும் என்ன தொடர்பு என்பனவற்றை வரும் வார எபிசோட்களில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.


Click it and Unblock the Notifications











