எலிமினேஷன் சுற்றினால் சூடுபிடிக்கும் கலர்ஸ் தமிழின் டான்ஸ் Vs டான்ஸ் 2

சென்னை: பரபரப்பிற்கு பஞ்சமில்லாத சிறப்பான நடன நிகழ்ச்சிகளை கண்டுரசிக்க இவ்வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு (2021 டிசம்பர் 18 மற்றும் 19) தினங்களில் கலர்ஸ் தமிழ் சேனலை தவறாமல் டியூன் செய்து பார்க்கலாம்

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்குச் தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 - ல் உற்சாகமூட்டும் நாட்டுப்புற நடனங்களினால் இந்த வார இறுதி நாட்களை மிகவும் சுவாரஸ்யமானதாக ஆக்க தயாராக இருக்கிறது.

பிரபல நடிகை குஷ்பு மற்றும் புகழ்பெற்ற நடன இயக்குனர் பிருந்தா ஆகியோரை நடுவர்களாக கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் இந்த வாரத்தின் அதிரடி சரவெடிச் சுற்றில் போட்டியாளர்களின் துடிப்பான நடனங்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்த காத்திருக்கின்றன.

மாபெரும் யுத்தத்தை

மாபெரும் யுத்தத்தை

பிரபலமான இந்நிகழ்ச்சியின் கௌரம்வம்மிக்க விருதை வெல்ல போட்டி போடும் இந்த போட்டியாளர்களின் இந்த மாபெரும் யுத்தத்தைக் காண 2021 டிசம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலை டியூன் செய்து பார்க்கலாம் .

ஐந்து கடும் போட்டிகளை

ஐந்து கடும் போட்டிகளை

பார்க்கும் ரசிகர்கள் மூச்சு விடுவதையே மறக்கச்செய்யும் அளவிற்கு 12 குழுக்களுக்கிடையே நடைபெறும் ஐந்து கடும் போட்டிகளை இந்த வாரஇறுதி நாட்களின் எபிசோடு ஒளிபரப்புகிறது. நடன இயக்குனர் ஸ்ரீதர் குழுவைச் சேர்ந்த காவ்யா மற்றும் மகாலட்சுமி வழங்கும் தாய்லாந்து எல்இடி நடனம், நடிகர் ஷாம் குழுவைச் சேர்ந்த நாவலரசன் மற்றும் அலிஷா வழங்கும் ஸ்கேர்க்ரோ, கருத்தாக்க நடனம், நடிகை அபிராமியின் குழுவைச் சேர்ந்த அபிராஜ் மற்றும் அஞ்சனாவின் போலீஸ் மற்றும் போக்கிரி கருத்தாக்க நடனம் மற்றும் நடிகை இனியாவின் வினோஷ் மற்றும் கபீர் வழங்கும் அரங்க ஒத்திகை கருத்தாக்க டான்ஸ் என மாறுபட்ட வெவ்வேறு கருத்தாக்க அடிப்படையிலான நடனங்கள் இந்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடில் இடம்பெறுகின்றன.

கண்களுக்கும், மனதுக்கும்

கண்களுக்கும், மனதுக்கும்

பிரபல தொகுப்பாளர் ஷா மற்றும் நடுவர்களுக்கிடையே நிகழும் நகைச்சுவையான உரையாடல்களும் இந்த வார இறுதி நாட்களில் ரசிகர்களின் கண்களுக்கும், மனதுக்கும் அற்புதமான விருது படைக்கும் .

Recommended Video

Pushpa Movie Audience Opinion | Allu Arjun, Rashmika Mandanna, Pushpa Public Review
விருதுக்கான இறுதிச்சுற்று

விருதுக்கான இறுதிச்சுற்று

இதோடு நிறுத்திவிடாமல், பரபரப்பை மேலும் உயர்த்தும் வகையில், போட்டியிலிருந்து போட்டியாளர்களை வெளியேற்றுகின்ற சுற்றும் இந்த எபிசோடில் இடம்பெறும். இதன்மூலம் இப்போட்டியிலிருந்து ஒரு குழு வெளியேறி மற்ற குழுக்களை விருதுக்கான இறுதிச்சுற்றுக்கு இன்னும் நெருக்கமாக எடுத்துச்செல்லும்.

எந்த குழு, இப்பரப்பான போட்டியிலிருந்து வெளியேறப்போகிறது மற்றும் இந்த வார நட்சத்திரமாக வெல்லப்போகும் குழு எது என்று கண்டறிய டிசம்பர் 18 மற்றும் 19 நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X