Colors tamil :எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஒளிபரப்பாகும் அடுத்தடுத்த தொடர்கள்.. கலர்ஸ் தமிழில் சுவாரஸ்யம்!
சென்னை : சன் டிவி, விஜய் உள்ளிட்ட சேனல்கள் வரிசையில் தற்போது கலர்ஸ் தமிழ் சேனலும் இணைந்துள்ளது. இந்த சேனலின் அடுத்தடுத்த சிறப்பான சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இந்த சேனல்களுக்கிடையே தங்களது நிகழ்ச்சிகளுக்கு டிஆர்பியை வாங்குவதில் தொடர்ந்து போட்டி காணப்படுகிறது. பெரும்பாலும் இந்தப் போட்டியில் சன் டிவி முன்னிலை பெற்று வருகிறது.
அடுத்தடுத்த இடங்களில் மற்ற சேனல்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த சேனல்களில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களும் ரசிகர்களை கவர தவறுவதில்லை.

எக்ஸ்பிரஸ் மோடில் ஒளிபரப்பாகும் கலர்ஸ் தமிழ் சீரியல்கள் : சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட சேனல்கள் வரிசையில் தற்போது கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற சேனல்களும் இணைந்துள்ளன. துவங்கி சில ஆண்டுகளே ஆன நிலையில், கலர்ஸ் தமிழ் சேனல், தன்னுடைய வித்தியாசமான நிகழ்ச்சிகள், அடுத்தடுத்த சிறப்பான தொடர்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளது. இந்த சேனலில் அடுத்தடுத்த சிறப்பான தொடர்கள் ஒளிபரப்பாகி வரும் சூழலில் ரசிகர்களையும் அதிகமாக கவர்ந்து வருகிறது.
அந்த வகையில் கலர்ஸ் தமிழ் சேனலில் அம்மன், இதயத்தை திருடாதே ஆகிய தொடர்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்தத் தொடர்கள் மீண்டும் சேனலில் ஒளிபரப்பாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான அதே ஸ்லோ மோடில் இல்லாமல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் இந்தத் தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளதாக சேனலின் புதிய ப்ரமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இதயத்தை திருடாதே தொடர் இன்றிரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தை கதைக்களமாக கொண்ட இந்தத் தொடரில் அரசியல் போட்டிக்கு இடையில் மாட்டிக் கொள்ளும் சிவா மற்றும் சஹானாவின் காதல் விவரிக்கப்படுகிறது. அடுத்த பாகத்தில் டானாக மாறிய சிவன் மற்றும் தொழிலதிபராக மாறிய சஹானா, அவர்கள் மகள் ஐஸ்வர்யா என கேரக்டர்கள் விவரிக்கப்பட்டன.
இந்தத் தொடரை போலவே ரசிகர்களை அதிகமாக கவர்ந்த தொடர் அம்மன். இந்தத் தொடரும் பாயிண்ட் டூ பாயிண்ட் என்ற கலர்ஸ் தமிழின் புதிய முயற்சியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்தத் தொடரில் எதிர்காலத்தை முன்பே அறிந்து கூறும் இளம் பெண் சக்தி நாயகியாக நடிக்க, அவரை ஊரே கொண்டாடுகிறது. ஆனால் அந்த ஊரில் மருத்துவராக இருக்கும் ஈஸ்வர், இதை ஏற்காத நிலையில், சக்தியின் போலித்தனத்தை வெளிப்படுத்த திட்டமிடுகிறார்.
ஆனால் ஒருகட்டத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் துளிர்க்கிறது. இவர்கள் காதலை அந்த ஊர் ஏற்றதா இல்லை எதிர்த்ததா என்பதை கதைக்களமாக கொண்ட இந்தத் தொடரும் கலர்ஸ் தமிழில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த தொடர். இந்நிலையில், இந்தத் தொடர்கள் மீண்டும் எக்ஸ்பிரஸ் ஸ்பீடில் ஒளிபரப்பாக உள்ளது ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. கலர்ஸ் தமிழின் பாயிண்ட் டூ பாயிண்ட் என்ற இந்த முயற்சிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











