twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிக்கலோடியோன் உடன் இனைந்து கலர்ஸ் தமிழ் ‘நிக் நேரம்’ ஆரம்பம்...குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி

    |

    சென்னை : 2022 ஜனவரி 24-ம் தேதி முதல் கோல்மால் ஜுனியர் மற்றும் ருத்ரா,பூம் சிக் சிக் பூம், திங்கள் முதல் வெள்ளி வரை முறையே மாலை 5.00 மணி மற்றும் 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

    Recommended Video

    Vijay Sethupathi at Fan Marriage Function

    வகுப்புகள் முடித்தபிறகு தங்களுக்குப் பிடித்தமான நிக்டூன்ஸ்ஐ பார்ப்பதற்காக அதை டியூன் செய்வதில் தான் குழந்தைகளின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்பதே உண்மை.

    தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ், நிக்கலோடியோன் குழுமத்திலிருந்து குழந்தைகளுக்கான 'நிக் நேரம்' என்ற ஒரு சிறப்பு பகுதியை ஒளிபரப்புவதன் மூலம் இளம் ரசிகர்களை வசீகரிக்க தயாராக இருக்கிறது.

    ஒரே பாடல்... மூன்று இசையமைப்பாளர்கள்... மேக்கிங் வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்! ஒரே பாடல்... மூன்று இசையமைப்பாளர்கள்... மேக்கிங் வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

    ரோஹித் ஷெட்டியின்...

    ரோஹித் ஷெட்டியின்...

    இந்த சிறப்பு செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக 2022 ஜனவரி 24 ம் தேதி முதல், ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை கோல்மால் ஜுனியர் மற்றும் "ருத்ரா: பூம் சிக் சிக் பூம்" என்ற இரண்டு புத்தம் புதிய அனிமேஷன் தொடர்களை முறையே மாலை 5.00 மணி மற்றும் 5.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பும்.

    உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் நிகழ்ச்சிகளின் வழியாக இன்னும் ஆழமான நல்லுறவை நிலைநாட்டும் ஒரு செயல்முயற்சியாக நிக்கலோடியோன் ஃபிரான்சைஸ், கலர்ஸ் தமிழின் ஒத்துழைப்போடு மக்கள் விரும்பி பார்க்கின்ற அவர்களது மொழியிலேயே நிகழ்ச்சிகளை வழங்கவிருக்கிறது. பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் படைப்பாக்கமான கோல்மால் ஜுனியர், அவரது சொந்த நகைச்சுவை திரைப்படத் தொடரான 'கோல்மால்' என்பதிலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

    சிறப்பான வெற்றிக்கு

    சிறப்பான வெற்றிக்கு

    சன் சிட்டி மற்றும் கால் சிட்டி என்ற கற்பனையில் படைக்கப்பட்ட மேஜிக் நகரங்களை பின்புலமாக கொண்ட "ருத்ரா: பூம் சிக் சிக் பூம்" என்ற தொடர் தனது அமானுஷ்யமான சக்திகளை இன்னும் கூர்மையாக்க கற்றுக்கொள்கின்ற 9 வயதான இளம் மெஜிஸியனின் கதையை சுவைபட சித்தரிக்கிறது.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பிசினஸ் ஹெட் திரு. எஸ். ராஜாராமன் இப்புதிய நிகழ்ச்சிகள் பற்றி கூறியதாவது: "தற்போது ஒளிபரப்பப்படும் எமது சமீபத்திய நிகழ்ச்சிகளின் சிறப்பான வெற்றிக்குப் பிறகு இரு அனிமேஷன் தொடர்களை நம் கலர்ஸ் தமிழ் தொகுப்பில் அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். எங்கள் புதினக் கதைகள் மற்றும் புதினமல்லாத ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் பிரபலமாக இருந்து வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் சிறார்களின் அபிமான தொலைக்காட்சியாக எங்களை நிலைநிறுத்திக்கொள்ள 'நிக் நேரம்' எங்களுக்கு உதவும் என்று நாங்கள் இப்போது உறுதியாக நம்புகிறோம் என்றார் .

    குழந்தைகளுக்கான தமிழ் கார்ட்டூன்

    குழந்தைகளுக்கான தமிழ் கார்ட்டூன்

    வயாகாம்18, கிட்ஸ் டிவி நெட்வொர்க்கின் கிரியேட்டிவ், கன்டென்ட் மற்றும் ரிசர்ச் பிரிவின் தலைவர் அனு சிக்கா தமிழ் பார்வையாளர்களுக்காக இந்த நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்வது குறித்து பேசுகையில், "எங்கள் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை இன்னும் பரவலான பார்வையாளர்கள் தொகுப்பிற்கு இவ்வாறு செய்வதுதான் நிக்கலோடியோனில் எங்களது முனைப்பாகவும், செயல்பாடாகவும் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. எங்களது குழந்தைகளுக்கான தொகுப்பிற்கு தமிழ் ஒரு முக்கியமான சந்தையாகும். ஏற்கனவே இருந்து வரும் பார்வையாளர்களோடு இன்னும் ஆழமான நல்லுறவை நிலைநாட்டவும் மற்றும் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறவாறு உள்நாட்டிலேயே உருவாக்கப்படுகிற நிகழ்ச்சிகளின் மூலம் பார்வையாளர்களை ஈர்க்கவும், கலர்ஸ் தமிழின் செல்வாக்கும், பிரபல்யமும் எங்களுக்கு உதவும் என்று பெருமையாக சொல்லி உள்ளார் .

    குழந்தைகளின் மனங்களை வெல்லும்

    குழந்தைகளின் மனங்களை வெல்லும்

    உங்களது அன்புக்குரிய செல்லங்களுடன் உங்கள் மாலைப்பொழுதுகளை மகிழ்ச்சியோடு பொழுதுபோக்க ஜனவரி 24 திங்கள் முதல் ஒளிபரப்பைத் தொடங்கும் இரண்டு அற்புதமான அனிமேஷன் நிகழ்ச்சிகளை கலர்ஸ் தமிழில் மாலை 5.00 மணியிலிருந்து, 6.00 மணி வரை தவறாமல் கண்டு ரசியுங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு கார்ட்டூன் நிகழ்ச்சி பிடிக்கும், அவர்களுக்கு உண்டான சிந்தனை மற்றும் கார்ட்டுன் வழியே அவர்கள் யோசிக்கும் வித்தியாசமான மனநிலை பெற்றோர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தும். ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தைகளின் எண்ணத்திற்கு ஏற்ப வித்தியாசமான புது கார்ட்டூன் நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த சூழலில் கலர்ஸ்-தமிழ் எடுத்திருக்கும் இந்த புதிய முயற்சி பல குழந்தைகளின் மனங்களை வெல்லும் என்பது மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Colors Tamil joins hands with Nickelodeon to start nick time Program for children
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X