கருப்பு நிற பர்தா பெண் யார்? வெளியானது ஜமீலா ஃபர்ஸ்ட் லுக்.. அடுத்த மாஸ் சீரியல்!

சென்னை : அடுத்தடுத்த நிகழ்ச்சிகள், தொடர்கள் என கலர்ஸ் தமிழ் சேனல் மாஸ் காட்டி வருகிறது.

அடுத்ததாக மேலும் ஒரு புதிய தொடரை களமிறக்க உள்ளது. அதன் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தத் தொடர் எப்போது, எந்த நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வித்தியாசமான நிகழ்ச்சிகள்

வித்தியாசமான நிகழ்ச்சிகள்

ரசிகர்களை அதிகமாக கவர்ந்தால் மட்டுமே அதிகமான டிஆர்பி கிடைக்கும் என்பதில் சேனல்கள் மிகுந்த தெளிவாக உள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு சேனலும் ரசிகர்களை அதிகமாக கவரும் விஷயங்களை ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கின்றன. சிறப்பான தொடர்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் என்று ஒளிபரப்பி வருகின்றன.

அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்

அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்

அந்த வகையில் முன்னணி சேனல்களுக்கு சவால் விடும்வகையில் கலர்ஸ் தமிழ் சேனலும் பல சீரியல்கள், நிகழ்ச்சிகள் என ஒளிபரப்பி வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களை அறிவித்து வருகிறது. சமீபத்தில் வெல்லும் திறமை என்ற புதிய நிகழ்ச்சியை துவக்கியுள்ளது. இதில் பிரபல நடிகை நிக்கி கல்ராணி இணைந்துள்ளார்.

புதிய தொடர் ஜமீலா

புதிய தொடர் ஜமீலா

ஜமீலா என்ற புதிய தொடர் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடர் குறித்த பர்ஸ்ட் லுக் டீசரில் ஒரு அமைதியான சூஃபி பின்னணி இசையுடன் கருப்பு நிற பர்தா அணிந்த பெண் ஒருவர் காட்சியளிக்கிறார். அவர் யார், என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளது.

மாஸான டீசர்

மாஸான டீசர்

அடுத்த மாதத்தில் இந்தத் தொடர் ஒளிபரப்பாக உள்ள நிலையில், விரைவில் விரைவில் இந்த கேள்விகளுக்கு அடுத்தடுத்த ப்ரமோக்களில் விடை கிடைக்கும் என்று நம்பலாம். தற்போது வெளியாகியுள்ள இந்த டீசர் மாஸாக காணப்படுகிறது. தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

குஷ்பூவின் மீரா தொடர்

குஷ்பூவின் மீரா தொடர்

இந்த சேனலில்தான் குஷ்பூவின் மீரா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சுரேஷ் மேனன் நாயகனாக நடித்து வருகிறார். இந்தத் தொடருக்கு மட்டுமில்லாமல் சேனலின் அடுத்தடுத்த தொடர்களுக்கும் சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது புதிய சீரியல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X