பொசசிவ்வில் கொதிக்கும் கதிர்.. மந்திரப் புன்னகை தொடரில் அடுத்த ட்விஸ்ட்!

சென்னை : நடிகர்கள் மெர்ஷீனா நீனு, ஹுசைன் அகமது, நியாஸ் கான் ஆகியோர் நடிப்பில் கலர்ஸ் தமிழில் புதிய குறுந்தொடர் மந்திரப் புன்னகை ஒளிபரப்பாகி வருகிறது.

காணாமல் போன தன்னுடைய சகோதரியை கண்டுபிடிக்கும் பொருட்டு தன்னுடைய காதலனுடன் களமிறங்குகிறார் கதையின் நாயகி காயத்ரி.

அதற்கான அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் இறுதியில் அவர் தனது சகோதரியை கண்டறிந்தாரா என்பதை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

மந்திர புன்னகை தொடர்

மந்திர புன்னகை தொடர்

கலர்ஸ் தமிழ் சேனல் ரசிகர்களை அதிகமாக கவரும்வகையில் பல தொடர்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது. அந்த வகையில் நெடுந்தொடராக இல்லாமல் 150 எபிசோட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது மந்திரப் புன்னகை த்ரில் தொடர். இந்த தொடரில் 3 முக்கிய கேரக்டர்களை கொண்டு சிறப்பான கதை புனையப்பட்டுள்ளது.

குரு வீட்டிற்கு வரும் காயத்ரி

குரு வீட்டிற்கு வரும் காயத்ரி

இந்த தொடர் சிறப்பான ப்ரமோக்களுடன் தன்னுடைய பயணத்தை துவங்கிய நிலையில் இந்தத் தொடரின் கேரக்டர்கள் காயத்ரி, கதிர் மற்றும் குரு விக்ரம் ஆகியோர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். தன்னுடைய சகோதரி காணாமல் போக, அவரைக் குறித்து தெரிந்துக் கொளள் குரு வீட்டிற்கு வருகிறாள் காயத்ரி.

புதிய ப்ரமோ வெளியீடு

புதிய ப்ரமோ வெளியீடு

அவருடைய தங்கைக்கு பிசியோதெரபி செய்யும் வகையில் வரும் அவர், அங்கு நிகழும் சம்பவங்களில் சிக்கிக் கொள்கிறார். கதிருடன் இணைந்தும் இவர் தனது தங்கையை தேடி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தத் தொடரின் புதிய ப்ரமோ அவரது பொசசிவ்வை காட்டுவதாக அமைந்துள்ளது.

கதிர் சந்தேகம்

கதிர் சந்தேகம்

இந்தப் ப்ரமோவில் குருவுடன் காயத்ரி மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் அவர் கூப்பிட்டவுடன் காரின் முன் சீட்டில் அமர்ந்து செல்வதாகவும் கதிர், காயத்ரியிடம் கூறுகிறார். இதனால் இவர்கள் இருவரின் உறவில் விரிசல் ஏற்படுகிறது. அவருக்கு விளக்கம் அளிக்கும் காயத்ரியின் செயல்களும் வீணாக முடிகிறது.

குறுந்தொடர் மந்திரப் புன்னகை

குறுந்தொடர் மந்திரப் புன்னகை

அனைத்து சேனல்களும் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்கள் 1000 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சீரியல் துவங்குவதற்கு முன்னதாகவே 150 எபிசோட்கள் மட்டுமே என்று தெரிவித்துவிட்டு தனது ஒளிபரப்பை துவக்கியுள்ள மந்திர புன்னகை தொடர் கவனத்தை பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X