எதிரெதிரே நின்று களமாடும் சிவன் -பார்வதி.. ரசிகர்களை கவர்ந்த சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிக தொடர்!

சென்னை: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் ரசிகர்களை ஈர்க்கும்வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிகப் புராண தொடர். ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று வெற்றிகரமான தொடராக கடந்த ஜூன் மாதம் முதல் இந்தத் தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது.

மிகப்பெரிய பிரம்மாண்ட செட்களில் உருவாகியுள்ள இந்தத் தொடரில் வரும் வாரம் சிவன் -பார்வதியின் அம்சமாக கார்த்திகைப் பெண்களிடம் பிறக்கிறார் சிவ மைந்தன் கார்த்திக்கேயன். கார்த்திகைப் பெண்கள் ஏழு பேரும் அவனுக்கு அன்னையாக இருந்து வளர்ப்பதாக அடுத்தடுத்த எபிசோட்களின் காட்சிகள் காணப்படுகின்றன.

television colors tamil channel sivasakthi thiruvilaiyadal serial


சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிக புராணத் தொடர்: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள், சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் ஆன்மிக புராணத் தொடராக சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிக புராணத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக இந்தத் தொடரில் கார்த்திகேயன் கையால் கொல்லப்படுவாய் என்ற பிரம்மனின் வாக்கை கேட்டு பயந்து அசுர அரசன் தாரகாசுரன் காத்திருப்பதாக எபிசோட்கள் காணப்பட்டன. கார்த்திகேயனைக் கொல்வதற்காக அவனது மகன்கள் 3 பேர் கையில் சிவ தனுசுடன் அவரை தேடி அலைகிறார்கள். அதில் அவர்களுக்கு எந்தவகையிலும் வெற்றி கிடைக்காத நிலையில் பார்வதியை நோக்கி அவர்கள் தவமிருக்கிறார்கள்.

கார்த்திகேயனை கொல்லத்துடிக்கும் தாரகாசுரன் மைந்தர்கள்: அவர்களின் தவத்தால் மகிழ்ச்சியடையும் பார்வதி, திரிபுரசுந்தரியாக இருந்து அவர்களைக் காப்பதாக வரமளிக்கிறார். இதற்கிடையில் சிவனும் பார்வதியும்தான் தன் பெற்றோர் என்பதைத் தெரிந்துகொள்ளும் கார்த்திகேயன், தன்னை சிவனும் பார்வதியும் விலக்கி வைத்துவிட்டதாக தவறாக எண்ணுகிறார். அவர்களுடன் கோபம் கொள்கிறார். தன்னை மகன் என அழைக்கவேண்டாம் என கார்த்திகேயன் கூற, அதைக் கேட்டு சிவனும் பார்வதியும் வேதனைக்குள்ளாகிறார்கள். இவ்வாறு அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதனிடையே, கார்த்திக்கேயனை கொல்ல தாரகாசுரனின் மைந்தர்கள் துடிக்கிறார்கள்.

எதிரெதிரே நின்று களமாடும் சிவன் -பார்வதி: அவர்களுக்கு அளித்த வரத்தால் பார்வதியும் அவர்கள் பக்கம் கட்டுப்பட்டு நிற்கிறாள். மைந்தனைக் காக்க கார்த்திக்கேயனே அறியாமல் அவர் பக்கம் நிற்கிறார் சிவன். இதனால் சிவனும் பார்வதியும் எதிரெதிரே நின்று களமாடும் சூழல் உருவாகிறது. இப்போது சிவனையும் பார்வதியையும் தன்னை மகனே என்று அழைக்க கார்த்திகேயன் சம்மதிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் மைந்தனைக் காக்க மனைவியை சிவன் எதிர்ப்பாரா, கொடுத்த வரத்துக்குக் கட்டுப்பட்டு சிவனையும் மகனையும் ஆபத்துக்கு பார்வதி ஒப்புக்கொடுப்பாரா என அடுத்தடுத்த திருப்பங்களுடன் இந்தத் தொடர் இந்த வார எபிசோடில் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி உள்ளது.

பிரம்மாண்டமான ஆன்மிக புராணத் தொடர்: மிகச்சிறப்பான செட்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிக புராணத் தொடர். திடுக்கிடும் அடுத்தடுத்த திடீர் திருப்பங்களுடன் பார்வையாளர்களைப் பரவசப்படுத்த காத்திருக்கிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பகும் சிவசக்தி திருவிளையாடல் தொடரில் இந்த ஆன்மிக அனுபவத்தை ரசிகர்கள் தொடர்ந்து பெற்று வருகின்றனர். இத்தகைய ஆன்மிக கதைகளை முந்தைய தலைமுறையினர் அதிகமாக கேட்டும் பார்த்தும் வளர்ந்த சூழலில் இளைய தலைமுறையினருக்கும் அந்த அனுபவத்தை இந்தத் தொடர் கொடுத்து அதிகமாக கவர்ந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X