சங்கராந்தி தேவியாக அவதாரமெடுக்கும் பார்வதி.. சிவசக்தி திருவிளையாடலின் இந்த வார எபிசோட்!

சென்னை: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து சீரியல்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. இந்த சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது ஆன்மிகப் புராண தொடரான சிவசக்தி திருவிளையாடல் தொடர். ரசிகர்களின் அமோக ஆதரவுடன் இந்த சீரியல் அதிக டிஆர்பியை பெற்று வருகிறது.

கடந்த ஜூன் மாதம் முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த தொடருக்கு அமோக ஆதரவை கொடுத்து வருகின்றனர். மிகவும் பிரம்மாண்டமாக ரசிகர்களை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடு இந்த சீரியல் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது.

television thiruvilaiyadal serial colors tv

சிவசக்தி திருவிளையாடல் தொடர்: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அதிக டிஆர்பிக்களையும் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த சேனலில் ஏராளமான ரசிகர்களை கவரும்வகையில் அமைந்து வருகிறது சிவசக்தி திருவிளையாடல் தொடர். ஆன்மிகப் புராண தொடரான இந்தத் தொடரில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நமது புராணங்களை இளைய தலைமுறையினரும் அறியும்வகையில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரின் பிரம்மாண்டமான செட்டிங் உள்ளிட்டவை அந்த கயிலாயத்திற்கே ரசிகர்களை அழைத்து செல்லும்வகையில் அமைந்துள்ளது.

television thiruvilaiyadal serial colors tv

கைலாயம் செல்ல மறுக்கும் கார்த்திகேயன்: தேவர்களுக்கு எதிராக செயல்படும் தாரகாசுரனை வதம் செய்வதற்காக கார்த்திகேயன் பிறப்பெடுத்த நிலையில், அவரை வளர்க்கும் கார்த்திகை பெண்களின் வரலாற்றை இந்த தொடர் சிறப்பாக வெளிப்படுத்தியது. இதையடுத்து அடுத்தடுத்த எபிசோட்களும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்வகையில் அமைந்து வருகிறது. சூரசம்ஹாரத்தில், தாரகாசுரனை வதம் செய்தபின்பு கார்த்திகேயன் கைலாயம் செல்ல மறுக்கிறான். அதனால் அவருடன் கார்த்திகை பெண்களும் கைலாயம் செல்ல முடிவெடுக்கின்றனர். அதேநேரத்தில் தரகாசுரன் வதம்செய்யப்பட்டதால் அவனுக்கு பிறகு, சங்கசூரன் அசுர அரசனாக பதவியேற்றுக் கொள்வதாக காட்டப்பட்டுள்ளது.

television thiruvilaiyadal serial colors tv

கார்த்திகேயனை ஏமாற்றும் கார்த்திகை பெண்கள்: தாரகாசுரனின் மரணத்திற்கு பழிவாங்குமாறு அசுரமாதா சங்கசூரனின் கூறிகிறார்.ஆனால் சங்கசூரன் திதியின் பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதால், திதிக்கும் சங்கசூரனுக்கும் இடையே மோதல் உருவாகிறது. இதையடுத்து திதியை, சங்கசூரன் சிறையில் தள்ளுவதாக காட்சிகள் அமைந்துள்ளன. இதனிடையே, கார்த்திகேயனுடன் கைலாயம் செல்லும் கார்த்திகை பெண்கள் கார்த்திகேயனை கைலாயத்தில் விட்டு விட்டுச் செல்ல ஒரு நாடகம் ஆடுவதாகவும் காணப்படுகிறது. தாங்கள் பணத்திற்காகத்தான் இதுநாள் வரை கார்த்திகேயனை வளர்த்ததாக அவர்கள் கூற, அதை கார்த்திகேயன் கேட்பதாகவும் இதையடுத்து கார்த்திகைப் பெண்கள் தங்கள் ஆசரமத்திற்குத் திரும்புவதாகவும் இந்த வார எபிசோட் காணப்படுகிறது.

television thiruvilaiyadal serial colors tv

சங்கராந்தி தேவியாகும் தேவி பார்வதி: இதனால் கார்த்திகேயன் கோபம் கொள்வதாகவும் இனி அவர்களை பார்க்க மாட்டேன் என்று சபதம் செய்வதாகவும் அடுத்தடுத்த காட்சிகள் அமைந்துள்ளன. இதனிடையே, சிறையில் இருக்கும் திதி தன்னுடைய பழிவாங்கும் தீவிரத்தில் உறுதியாக சிறையில் இருந்தபடியே கார்த்திகேயனை பழி வாங்குவதற்காக கிங்கராசுரன், சங்காரசுரன் என அசுரர்களை அனுப்பி வைக்கிறார். அவர்கள் கார்த்திகை பெண்களை தாக்க, காப்பாற்ற கார்த்திகேயன் வருகிறான். அப்போது அசுரர்களின் கை ஓங்க, கார்த்திகை பெண்களை காக்க தேவி பார்வதி சங்கராந்தி தேவியாக அவதாரம் எடுப்பதாக இந்த வார எபிசோட்களில் காணப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு அவர் கர்த்திகை பெண்களை காப்பதாகவும் இந்த வார சிவசக்தி திருவிளையாடல் தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.

television thiruvilaiyadal serial colors tv

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X