twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாபெரும் இறுதிப்போட்டிக்கான தீவிரமான ரேஸில் நுழைந்திருக்கும் பஜன் சாம்ராட்.. சண்டே கொண்டாட்டம் !

    |

    சென்னை : கலர்ஸ் சண்டே கொண்டாட்டத்தில் பார்வையாளர்களுக்கு இந்த வாரம் ஒரு தனிச்சிறப்பான வியப்பு காத்திருக்கிறது.

    புனைக்கதைகளற்ற நிகழ்ச்சியின் சிறப்பான அணிவரிசையின் மூலம் இவ்வாரத்தை உங்களுக்கு ஆனந்தமானதாக ஆக்குவதற்கு கலர்ஸ் தமிழ் தயாராக இருக்கிறது.

    பழம்பெரும் மலையாள நடிகர் பி.சி.சோமன் காலமானார் பழம்பெரும் மலையாள நடிகர் பி.சி.சோமன் காலமானார்

    பஜன் சாம்ராட் நிகழ்வில் கௌரவம் மிக்க விருது பரிசை வெல்வதற்கான கடுமையான போட்டி மற்றும் மனதை ஈர்க்கும் வேறுபிற நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் ஒளிபரப்பாகும்.

    சண்டே ஸ்பெஷல்

    சண்டே ஸ்பெஷல்

    இவ்வார நிகழ்ச்சிகள் பார்வையாளர்களது கண்களை திரைகளை விட்டு அகற்றவிடாமல் செய்வது நிச்சயம். 2021 மார்ச் 28, ஞாயிறு இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் மற்றும் திங்கள் முதல் புதன் வரை 2021 மார்ச் 29 முதல், 31 வரை காலை 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் பஜன் சாம்ராட் நிகழ்ச்சிகளை தவறாமல் கண்டுகளிக்க வேண்டும் .

    கேம் ஷோ

    கேம் ஷோ

    கலர்ஸ் தமிழ் கொண்டாட்டம் - கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியின் கீழ் ஒளிபரப்பப்படவிருக்கும் அடுத்த எபிசோடு நிச்சயம் தவறவிடக்கூடாத ஒன்றாகும். சில்லுனு ஒரு காதல் மற்றும் அம்மன் நெடுந்தொடர்களின் முன்னணி நடிகர்கள், அவர்களது அற்புதமான நடிப்பு மற்றும் ஆர்வமூட்டும் கேம்ஸ்களினால், பார்வையாளர்களை கிளர்ச்சியின் உச்சத்திற்கே எடுத்துச் செல்வார்கள் .

    நேயர் விருப்பம்

    நேயர் விருப்பம்

    இந்த இரு நெடுந்தொடர்களின் நடிகர்கள், பவித்ரா கௌடாவை (அம்மன் கதாபாத்திரம்), அம்மனாக அலங்காரப்படுத்துவதன் மூலம் அம்மனின் உண்மையான உணர்வை கொண்டாடுவதை இந்த வார எபிசோடு சிறப்பாக சித்தரிக்கிறது. இதை தொடர்ந்து இடம்பெறுகின்ற பூஜை சடங்கானது இந்த எபிசோடுக்கு ஒரு சிறப்பம்சத்தை சேர்த்து வழங்குகிறது.

    கலகலப்பு நிச்சயம்

    கலகலப்பு நிச்சயம்

    பஜன் சாம்ராட் - கடுமையான போட்டி மாபெரும் இறுதிப்போட்டியை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் நிலையில், முதல் 7 இடங்களைப் பிடித்திருக்கும் குழுக்கள், தீவிர மோதலுக்கு தயாராக இருக்கின்றன. தங்களது சொந்த தனித்துவமான வழிமுறைகளில் ஆத்மார்த்தமான கிருதிகளை தெய்வீக உணர்வுடன் பாடுவதன் மூலம் மற்ற குழுக்களை விட சிறப்பாக செயல்பட அனைத்து குழுக்களும் முயற்சிக்கும்.

    பஜன் பாடல்

    பஜன் பாடல்

    இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியை வெல்வதற்காக இவர்கள் முயற்சிக்கின்றபோது குழுக்களின் உண்மையான திறனையும், மனஉறுதியையும் இந்த நிகழ்வு அழகாக காட்சிப்படுத்தும்.அதற்கும் மேலாக,கர்நாடக இசை நிபுணர்களான டாக்டர் கணேஷ் மற்றும் மஹதி வழங்க விருக்கின்ற பஜன் பாடல்கள், மனதை சாந்தப்படுத்துகின்ற அமைதியான உலகிற்கு பார்வையாளர்களை இட்டுச்செல்லும் என்பது நிச்சயம். பஜன் ஆர்வலர்கள் மத்தியில் என்றும் மறக்க இயலாத பதிவுகளை இது விட்டுச்செல்லும் என்பதும் உறுதி.

    கண்ணுக்கு குளிர்ச்சி

    கண்ணுக்கு குளிர்ச்சி

    உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் குதூகலமூட்டும் போட்டிகளில் பங்கேற்று நட்புறவான மோதல்களில் ஈடுபடும் கலர்ஸ் தமிழ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை தவறாது பார்த்து மகிழ, 2021 மார்ச் 28, ஞாயிறு இரவு 7:00 மணிக்கும் மற்றும் 2021, மார்ச் 29 திங்கள் முதல் மார்ச் 31 புதன் வரை காலை 7.00 மணிக்கும், முறையே கலர்ஸ் தமிழ் கொண்டாட்டம் மற்றும் பஜன் சாம்ராட் நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கவும், தெய்வீக உணர்வை நினைத்துக் கொள்ளவும் மறவாமல் கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள்.

    English summary
    Colors TV telecasts Bhajan samrat in its Sunday bucket.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X