தீபாவளி அன்று பார்வையாளர்களை மகிழ்விக்க... கலர்ஸ் தமிழ் செய்துள்ள மாஸ்டர் பிளான்

சென்னை : 5 சிறப்பு திரைப்படங்கள்; அனைத்து நிகழ்ச்சிகளிலும் எதிர்பாராத திருப்பங்களுடன் தனித்துவமிக்க 3 சிறப்பு இசை நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்

தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பலரது ஆதரவுடன், தீபாவளித் திருநாள் அன்று உற்சாகமான நிகழ்ச்சிகளை உங்களுக்காக ஒளிபரப்ப உள்ளது.

இந்த மங்களகரமான தீபாவளிப் பயணத்தைத் தொடங்கும் வண்ணம், கலர்ஸ் தமிழின் பிரபலமான நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்கள் ரசிக்கும்படியான புதிரான கதைக்களங்களுடன் அலங்கரிக்க உள்ளன.

யாரை திருமணம் செய்வார்?

யாரை திருமணம் செய்வார்?

பரபரப்பான திருமணக் காட்சியுடன் 'அம்மன் 2' தொடர் தொடங்குகிறது. ஈஸ்வர் யாரை திருமணம் செய்வார்? சக்தியா அல்லது துர்காவா? நவம்பர் 4, 2021 தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு இதைக் காண தவறாதீர்கள்.நிறைய நாட்கள் நிறைய எபிசோடுகள் கடந்து சென்ற நிலையில் அனைவரும் காத்திருக்கும் இந்த ட்விஸ்ட் மிகவும் சுவாரஸ்யமானது.

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

உற்சாகத்தை ஒரு படி உயர்த்தும் வகையில் அபி மற்றும் அசோக் பற்றிய அதிர்ச்சி தரும் உண்மைகள் 'அபி டெய்லர்' தொடரில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. நடிகை தீபா ஷங்கர் தீபாவளியை கொண்டாடும் வகையில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதேபோல, இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சில்லுனு ஒரு காதல்', தொடரில் கருத்தம்மா ராஜஸ்ரீயின் இனிமையான சிறப்பு தோற்றம் உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்லும்.

2 தொடர்கள்

2 தொடர்கள்

அதோடு நின்றுவிடாமல், பார்வையாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் வகையில் சேனலின் பாராட்டப்பட்ட நிகழ்ச்சிகளான 'எங்க வீட்டு மீனாட்சி' தொடர் இரவு 7 மணிக்கும், 'இதயத்தை திருடாதே 2' தொடர் இரவு 8 மணிக்குக்கும் என 2 தொடர்கள் பார்வையாளர்களின் பண்டிகை கொண்டாட்டமாக வருகிறது.

ஆர்வமூட்டும் திரைப்படங்களை

ஆர்வமூட்டும் திரைப்படங்களை

இது மட்டும் இன்றி, டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியான டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் ஒளிபரப்ப உள்ளது. இந்த வார இறுதியில் இரவு 7.30 மணிக்கு கோலிவுட் நட்சத்திரங்களை கொண்டாடும் வகையில் இந்நகழ்ச்சி அமையவுள்ளது. நவம்பர் 1-ம் தேதி மதியம் 1:30 மணி முதல் உத்தரவு மகாராஜா, மீண்டும் ஒரு மரியாதை, சேஸிங், மகாமுனி மற்றும் தேவதாஸ் பிரதர்ஸ் போன்ற ஆர்வமூட்டும் திரைப்படங்களையும் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்புகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி இந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் இந்த திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

எஸ்.பி.பி ,யேசுதாஸ்,இளையராஜா,ரஹ்மான்

எஸ்.பி.பி ,யேசுதாஸ்,இளையராஜா,ரஹ்மான்

மேலும், தீபாவளி அன்று காலை 6:30 மணிக்கு புகழ்பெற்ற பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் யேசுதாஸ் பாடிய வாய்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் (Voice of Legends) நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து இளையராஜா 75 நிகழ்ச்சியும், காலை 9.30 மணிக்கு இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் மற்றும் மதியம் 12.30 மணிக்கு மெட்ராஸின் மொசார்ட் (Madras Mozart) ஏஆர் ரஹ்மான் இடம்பெறும் 'நெஞ்சே எழு' ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X