அடடே.. இது நல்ல ஐடியாவா இருக்கே.. நயனை வைத்த புரோமாவா.. பேஷ் பேஷ்!
Recommended Video
சென்னை: கலர்ஸ் தமிழ்டிவியில் ல் மே ஒன்றாம் தேதி இமைக்கா நொடிகள் படம் போடறாங்க. இதுக்கான பிரோமோ வாவ் சொல்ல வைக்குது.
இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடிச்சு இருப்பாங்க. விஜய் சேதுபதி செத்துருவார். பிறகுதான் டோட்டலா மாறுது நயனோட கதாபாத்திரம்.

ரொம்ப த்ரில்லிங்கா போகும் இந்த படத்தை கலர்ஸ் தமிழ் டிவி சேனல் வாங்கிட்டாங்க. இதை மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினத்தின் போது விடுமுறை நாள் சிறப்பு திரைப்படமா ஒளிபரப்பறாங்க.
இதுக்கான பிரோமோவில், படத்தில் நயன் சஸ்பென்சாக ஒருவரிடம் போன் பேசும் காட்சியையே யூஸ் செய்து பிரோமோ வெளியிட்டு இருக்காங்க.
அதுல வேற வசனம் வரும், ஆனா, இதுல.. மேம்.. முதன் முதலா எங்க சேனலுக்கு வர்றீங்க.. நேரம் சொன்னா நல்லாருக்கும்னு.அதுக்கு நயன் நீங்களே சொல்லுங்கன்னு சொல்றாங்க. 3:30 ஓகேவா மேம்னு எதிர்முனை கேட்க, ஓகே வந்துடறேன்னு சொல்றாங்க.
இந்த பிரோமோ நிஜமாவே நல்லாருக்கு. ஒரு வாரமா படம் பத்தின பிரோமோ இல்லாம போயிகிட்டு இருந்ததுல சஸ்பென்ஸா கூட இருந்துச்சு. எதிர்பார்ப்பாவும் இருந்துச்சு.
இந்த சமயத்துலதான் இமைக்கா நொடிகள் படத்தை மே மாதம் ஒன்றாம் தேதி ஒளிபரப்பறதா பிரோமோ மாத்தி இருக்காங்க. எப்போதும் நயனுக்கு டப்பிங் கொடுப்பது தீபா வெங்கட்தான். இந்த பிரோமோவுக்கும் அவரை வைத்து டப்பிங் பேச சொல்லி இருப்பது இந்தபிரோமோவை தத்ரூபமாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











