சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வரும் காமெடியன் ஆதவன்
ஆதித்யா சேனலில் கொஞ்சம் நடிங்க பாஸ் என்று ரோட்டில் போகிற வருகிறவர்களையெல்லாம் அழைத்து கிண்டலடிக்கும் தொகுப்பாளர் ஆதவன் தற்போது சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகிறார்.
நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜேஷ்குமார். தான் குறும்படமாக டைரக்ட் செய்த 'சிக்கிக்கு சிக்கிக்குச்சு' படத்தை சினிமாவாக எடுத்து வருகிறார். அதில்தான் ஆதவன் முழுநீள காமெடியனாக நடிக்கிறார். சினிமா ஷுட்டிங் முடிந்து மற்ற வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
சினிமாவில் பிரபல நடிகர்கள் பேசிய வசனத்தை பொதுமக்களை பேச வைத்து நடிக்கச் சொல்வதுதான் ' கொஞ்சம் நடிங்க பாஸ்' நிகழ்ச்சியின் கரு. இதுவரை எல்லோரும் நடிக்கச் சொன்ன ஆதவன் காமெடியனாக நடிக்கிறார்.

இந்த படத்தில் தனது காமெடி ரசிக்கப்பட்டால்தான் ஆதவன் தொடர்ந்து நடிப்பாராம். இல்லாவிட்டால் மீண்டும் மற்றவர்களை நடிக்க சொல்லி கலாய்த்துக் கொண்டிருப்பாராம் இதையும் அவரே கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகர்கள் சந்தானம், சிவகார்த்திகேயன், இமான் அண்ணாச்சி , சேட்டை செந்தில் வரிசையில் ஆதித்யா சேனல் ஆதவனும் சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்கு நடிக்க வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











