மகள்களுக்கு தாயாக மாறிய மதுரை முத்து.. ராணி போல அலங்காரம்.. மதுரையே அசந்துபோச்சு!

சென்னை: தொலைக்காட்சியில் எப்போதும் மொக்கை ஜோக்குகளை சொல்லி ரசிகர்களை சிரிக்கவைத்து வருபவர் மதுரை முத்து. இவரின் மகள்களுக்கு ஊரே உச்சுகொட்டும் அளவிற்கு மஞ்சள் நீராட்டு விழாவை நடத்தி அனைவரையும் ஆச்சயரியப்படுத்தினார்.

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப் போவது யாரு, சன் டிவியில் அசத்தப் போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக கலந்துக் கொண்டு கதை சொல்வது போல ஆரம்பித்து ஜோக்குகளை சொல்லி ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பவர் தான் மதுரை முத்து. விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, குக்வித் கோமாளி என பல நிகழ்ச்சியில் கடி ஜோக்குகளை சொல்லி நம்மை கடித்து விடுவார். குறிப்பாக பழைய ஜோக் தங்கதுரை, மதுரை முத்துவும் சேர்ந்துவிட்டால் நிகழ்ச்சியே களைகட்டிவிடும்.

madurai muthu daughter
Photo Credit:

மதுரை முத்து: மதுரை முத்து வையம்மாள் என்பவரை திருணம் செய்து கொண்டார். வையம்மமாள் மதுரையில் இருந்து பிள்ளையார்பட்டி செல்வதற்காக டிரைவர் கண்ணனுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, காரின் டயர் வெடித்து, கார் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதியதில் வையம்மாள் உயிரிழந்தார், அதனால் மிகவும் மனம் உடைந்து போன மதுரை முத்து சோகத்தில் மூழ்கி இருந்தார். யாழினி ஸ்ரீ மற்றும் முத்து ஸ்ரீ.
இரண்டு பெண் மகளுடன் மதுரை முத்து மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்த போது, மதுரை முத்து தன் குழந்தைகள் நலனுக்காக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

மதுரை முத்துவின் மகள்கள்: இந்நிலையில் மதுரை முத்து தனது இரண்டு மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை மதுரையை அசத்துபோகும் அளவிற்கு நடத்தி அசத்தி உள்ளார். குதிரை தேரில் மகள் களை உட்கார வைத்து குதிரை ஓட்டி வந்தார் மண்டபத்துக்குள் வந்ததைப்பார்த்த ஒட்டுமொத்த மக்களும் அசந்து போனார்கள். கோலாக்கலமாக நடைபெற்ற இந்த விழாவிற்காக இரண்டு மகளும் ராணி போல தயாராகி உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் ஒரே நிறத்தில் உடை, ஆபரணம் என எதிலும் மதுரை முத்து தனது மகள்களுக்கு குறைவைக்கவே இல்லை. இந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அம்மா இல்லாத குறையை குழந்தைகளுக்கு தெரியாமல் வளர்ந்துள்ளார் என்றும், அம்மா பாசத்தையே மிஞ்சிவிட்டார் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X