நீண்ட நாள் கனவு.. புது வீட்டில் குடியேறிய விஜய் டிவி பிரபலம்.. இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி!
சென்னை: பல கலைஞர்களை வளர்ந்துவிட்ட பெருமை விஜய் டிவிக்கு உண்டு. அப்படி அந்த தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் கேபிஒய் வினோத். தற்போது இவரின் நீண்ட ஆண்டு கனவு கனவான மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கேபிஓய் வினோத்: சென்னையின் திருவொற்றியூரை சேர்ந்த வினோத் பாபு விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சீசன் 6ல் பாலாவுடன் சேர்ந்து மக்களை சிரிக்க வைத்தார். அந்த சீசனின் டைட்டிலை வென்ற இவர். நடிகர், நகைச்சுவையாளர் மற்றும் தொகுப்பாளர் என கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வளர்ந்து கொண்டார். சினிமா மீது இருந்த ஆசையால் கார்ப்பரேட் கம்பெனியில் இரவு நேரத்தில் வேலை பார்த்துக்கொண்டே பகலில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார் வினோத்.

கடுமையான உழைப்பு: ஆரம்பத்தில் எதிலும் சரியாக வாய்ப்பு கிடைக்காததால், வின் டி.வி, ஜீ தமிழ், வேந்தர் டி.வி என சின்ன சின்ன சேனலில் கிடைத்த வேலைகளை செய்து கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் தான் கலக்கப்போவது யாரு சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு வெற்றியும் பெற்றார். அதன் பின் சின்னத்தம்பி, ராஜா ராணி போன்ற சீரியலில் நடித்து வந்த இவர் மனைவியுடன் சேர்ந்து 'மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னர்-அப் பட்டத்தை வென்றார்.
நீண்ட நாள் கனவு: நடிகர் கேபிஒய் வினோத் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் அவ்வப்போது காமெடி வீடியோவை தனக்கு சொந்தமான யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். தற்போது நடிகர் கேபிஒய் வினோத், தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயத்தை சொல்லி உள்ளார். அதாவது சொந்தமாக வீடு கட்டி அதில் பால் காய்ச்சி குடியேறி உள்ளார். அந்த வீடியோ தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து கடுமையான உழைப்புக்கு கிடைத்த பரிசு என அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











