மதுரை முத்து வாங்கிய புது கார்.. விலை என்னனு தெரியுமா?
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடியனாக மதுரை முத்து மொக்க ஜோக்குகளை சொல்லி ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பதில் வல்லவர். அண்மையில் மதுரை முத்துவின் இரண்டு மகளுக்கும் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக செய்து முடித்தார். தற்போது மகள்களுக்காக கார் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த மகிழ்ச்சியான செய்தியை முத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
காமெடியன், பட்டிமன்ற பேச்சாளர், நடிகர் என பல தன்மைகளை கொண்ட மதுரை முத்து, விஜய் தொலைக்காட்சியில் கலக்கப் போவது யாரு, சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். இவர் தனக்கே உரிய பாணியில் செம மொக்கை ஜோக்குகளை சொல்லி எப்படியாவது ஆடியன்சை சிரிக்க வைத்துவிடுவார்.

காமெடியன் மதுரை முத்து: கடந்த மாதம் மதுரை முத்து தனது இரண்டு மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை மதுரையை அசத்துபோகும் அளவிற்கு நடத்தினார். இரண்டு மகளையும் ராணி போல அலங்கரித்து குதிரை தேரில் மகள்களை உட்கார வைத்து குதிரை ஓட்டி வந்து மண்டபத்துக்குள் வந்ததை பார்த்து அனைவரும் வாயடைந்துப்போனார்கள். இந்த விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
புது கார்: மதுரை முத்து தனது மகள்களுக்காக நடத்திய விழாவை ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவும் பேசிய நிலையில் தற்போது மதுரை முத்து மகிழ்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது, மதுரை முத்து, Tata sierra காரை வாங்கி உள்ளார். தனது இரண்டு மகள்களுடன் சென்று கார் வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் மதுரை முத்து, எங்க வீட்டில் சிகப்பாய் ஒரு குழந்தை பிறந்துள்ளது Tata sierra உடனே பிரம்மாண்ட காரை பார்த்தீர்களா? என்று போட்டு பீதியை கிளப்ப வேண்டாம் இன்னும் முதல் இஎம்ஐ கட்டவில்லை என அவருக்கு உரிய பாணியில் நகைச்சுவையான பதிவு போட்டுள்ளார். இந்த காரின் விலை 15 லட்சத்தில் இருந்து 17 லட்சம் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. புது காரை வாங்கி இருக்கும் மதுரை முத்துக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











