Nanjil vijan: மொத்தமும் பஞ்சு தான் கோபால்.. நாஞ்சில் விஜயனின் அட்ராசிட்டி!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் நாஞ்சில் விஜயன். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிரிச்சா போச்சு, அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சியில் கலக்கிய இவர், ரசிகர்களை சிரிக்க வைத்து இருப்பார். தற்போது இவர் ஒரு நிகழ்ச்சிக்காக பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

நாஞ்சில் விஜயன் எந்த கேரக்டர் கொடுத்தாலும், அதில் நன்றாக பொறுந்தி நடிப்பது இவருக்கு கை வந்த கலை. குறிப்பாக பெண் கதாபாத்திரம் கொடுத்தால், அதற்கு என்று நேரம் எடுத்து பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு நடித்து அசத்தி விடுவார். நகைச்சுவையில் கலக்கி வந்த நாஞ்சில் விஜயன் 2023ம் ஆண்டு மரியா மேக்ரினா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Nanjil vijayan photos
Photo Credit:

நாஞ்சில் விஜயன்: திருமணத்திற்கு பின் நாஞ்சில் விஜயன் தனது மனைவியுடன் விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், இருவரும் மற்ற போட்டியாளர்களுக்கு ஈடாக போட்டி போட்டு பல டாஸ்க்களை செய்து அசத்தினார்கள். கடந்த ஆண்டு நாஞ்சில் விஜயனுக்கு பெண் குழந்தை நிலையில், திருநங்கை வைஷூ காவல் ஆணையாளர் அலுவலக்த்தில், நாஞ்சில் விஜயன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார். இது இணையத்தில் பேசு பொருளான நிலையில், நாஞ்சில், தனது மனைவி மரியாவுடன் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டு வைஷூவின் குற்றச்சாட்டை மறுத்தார். இதையடுத்து, வைஷூ அந்த புகார் மனுவை திரும்ப பெற்றார்.

Nanjil vijayan photos
Photo Credit:

எல்லாமே பஞ்சா: தற்போது, ஜெயா டிவி, விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை நாஞ்சில் விஜய் கலந்து கொண்டு வருகிறார். தற்போது இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்காக பெண் வேடமிட்டு இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள், 'குரு என் ஆளு' படத்தில் விவேக் பேசிய வசனத்தை பேசி கிண்டலடித்து வருகின்றனர். தற்போது நாஞ்சில் விஜயனின் போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X