என்னது பிக்பாஸ்ல காமெடி நடிகர் செந்திலா.. அப்ப வாழைப்பழ காமெடி கண்டிப்பா இருக்கும்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இந்த 7 சீசன்களிலும் நடிகர் கமல்ஹாசன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், இந்த சீசனிலிருந்து அவர் விலகியுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இந்த 8வது சீசனை தொகுத்து வழங்கவுள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த சீசன் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் தொகுப்பை மையமாக கொண்டு அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அவரது ஆங்கரிங் எப்படி இருக்கப் போகிறது. கமலுக்கு இணையாக இந்த நிகழ்ச்சியில் டஃப் கொடுப்பாரா என்பது உள்ளிட்ட கேள்விகள் ரசிகர்களிடையே காணப்படுகிறது.

bigg boss tamil 8 actor senthil

பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து 7 சீசன்களாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கடந்த 7 சீசன்களாக ஆங்கராக இருந்து பல சுவாரஸ்யங்களை கொடுத்திருந்தார் நடிகர் கமல்ஹாசன். கடந்த சீசனில் அவர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார். இந்நிலையில் தனக்கு அதிகப்படியான படங்களின் கமிட்மெண்ட் இருப்பதாக கூறி அவர் இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் விஜய்சேதுபதியை களமிறக்கியுள்ளது சேனல் தரப்பு. அவரது ஆங்கரிங்கை உறுதி செய்யும்வகையில் அடுத்தடுத்து பிரமோக்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஆங்கராக விஜய் சேதுபதி: இந்நிலையில் கமல்ஹாசனுக்கு மாற்றாக விஜய் சேதுபதி இருப்பாரா அவரது தொகுப்பு எப்படி இருக்கும் ஒருதலைப்பட்சமாக நடந்துக் கொள்வாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் ரசிகர்களிடயே காணப்படுகிறது. கடந்த சீசனிலேயே இரண்டு பிக்பாஸ் வீடு என்பது உள்ளிட்ட பல விஷயங்களை புதிதாக புகுத்திய நிலையில், இந்த சீசனிலும் அதுபோன்ற பல மாற்றங்களை பார்க்க முடீயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது. நிகழ்ச்சி அக்டோபர் 6ம் தேதி துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,.

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு: ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று பிரமோ மூலம் ரசிகர்களை இந்த நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், நடிகர் ரஞ்சித் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தில் அவரது மகளாக நடித்திருந்த சச்சிதா பெயரும் அடிபடுகிறது. நடிகர் ரியாஸ்கான், நண்டு ஜெகன், குக் வித் கோமாளி சுனிதா, சார்பட்டா பரம்பரை சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டவர்களும் இந்த சீசனில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த லிஸ்ட்டில் தற்போது இணைந்துள்ளார் பிரபல காமெடி நடிகர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் செந்தில்?: நடிகர் செந்தில்தான் பிக்பாஸ் 8 சீசனில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களின் மூலம் தனியாகவும் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்தும் பல காமெடி கலாட்டாக்களை செய்தவர் செந்தில். சினிமாவில் இருந்து விலகியிருந்த இவர் தற்போது ரீ என்ட்ரி கொடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணையவுள்ளது அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் முன்னதாக விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கேற்று கரகாட்டக்காரன் படத்தின் அனுபவங்களை பகிர்ந்த நிலையில் தற்போது மீண்டும் டிவி பக்கம் வந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X