Don't Miss!
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தூங்கறவங்களை எழுப்பி தூக்க மாத்திரை குடுக்கறதா... ஐயோடா....!
சென்னை: சன் டிவியின் தினம் இரவு நேர ஒளிபரப்பு காமெடி ஜங்க்ஷன். இதைப் பார்த்துட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி தூங்கப் போறாங்க மக்கள்.
இதுல ஒரு விஷயம் என்னன்னா காமெடி திறமை உள்ளிருக்கும் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கிடைச்சுக்கிட்டே இருக்குது.
சிலர் நல்லபடியா மேல வந்துடறாங்க... சிலரால் ஜொலிக்க முடியாம போனாலும், இது மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிரிக்க வைக்கறாங்க.
மதுரை முத்து ஜோக்ஸ் பார்க்கலாம்...
நடக்கப் போறது தெய்வத்துக்கும் தீய சக்திக்குமான கல்யாணம்னு சொல்றானே...!
தூங்கிவிட்டவருக்கு எதுக்கு
புருஷன் நல்லா அசந்து குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்தாராம்.. .மனைவி என்னங்க.. என்னங்கன்னு எழுப்பறாங்க.
அவரும் எழுந்து என்னடி. நல்லா தூங்கிட்டு இருக்கேன்..இப்படி தூக்கத்தை கெடுக்கறியேன்னு கேட்கறார்.
தூக்க மாத்திரை போட்டுக்க மறந்துட்டு தூங்கிட்டீங்க...அதுக்குத்தான் எழுப்பினேன். போட்டுக்கோங்கன்னு குடுக்கறாங்க மனைவி.. இது எப்படி இருக்கு?
பாட்டி வயசுக்கு
டேய்.. எங்க பாட்டி வயசுக்கு வந்திருச்சுடான்னு ஒருத்தன் சொல்ல...
என்னடா சொல்றே...பாட்டி கூட வயசுக்கு வருவாங்களான்னு கேட்கறான் இன்னொருத்தன்.
ஆமாண்டா.. பாட்டி சாகற வயசுக்கு வந்துட்டாங்கன்னு சொல்றான் இவன். இது கொஞ்சம் ஓவர்தான்...
எங்கியோ பார்த்து
ஒருத்தர் சொன்னார்...சார் உங்களை எங்கியோ பார்த்து இருக்கேனேன்னு... அவர் ஒன்றும் பேசாமல் சிரிக்கிறார். ட்வீட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இப்படி எதிலும் இருக்கீங்களா... பார்த்த மாதிரியே இருக்கேன்னு இவன் மீண்டும் சொல்ல.... மூதேவி.. உன் வீட்டுக்கு பக்கத்துல 25 வருஷமா குடி இருக்கேன்டான்னு சொல்றாராம் அவர். இது நாட்டுல நடக்கறதுதானே...
வலி ரொம்ப
புருஷன் பொண்டாட்டியை கூப்பிட்டு, எனக்கு ரொம்ப நெஞ்சு வலிக்குதுடி... உடனே டாக்டரை கூப்பிடுன்னு சொல்றார்.
மனைவி அவர் போனை எடுத்துட்டு வந்து நோண்டிக்கொண்டு இருக்க... என்னடி அவசரம் புரியாம... டாக்டருக்கு போனை போடுன்னு சொல்றார்.
இல்லைங்க உங்கப் போனோட பாஸ்வேர்டு தெரியலைன்னு சொல்லி... ஓபன் பண்ண பாஸ்வேர்டு சொல்லுங்க...டாக்டருக்கு போன் பன்றேன்னு மனைவி சொல்றாங்க. இப்போ எனக்கு நெஞ்சு வலி சரியாப் போச்சு.. போயி உன் வேலையைப் பாருன்னு கணவன் சொன்னாராம்...!
பொண்டாட்டிகிட்டே பாஸ்வேர்டை சொல்லுவானா புருஷன்?.