காமெடி ஜங்க்ஷன்... நமக்கு எதுக்கு டென்சன்....?
சென்னை: சன் டிவியில் இரவு பதினோரு மணிக்கு காமெடி ஜங்க்ஷன்னு காமெடி ரியாலிட்டி ஷோ கடந்த மூணு வருஷமா நடத்திக்கிட்டு இருக்காங்க.
நகைச்சுவை மன்னன் மதுரை முத்து, ஆதவன் சிறப்பு பார்வையாளர்களாவும், அவ்வப்போது ஜோக்ஸ் சொல்கிறவர்களாவும் இருக்காங்க.
நிகழ்ச்சியை நகைச்சுவையாளர் ஜெயச்சந்திரன் தொகுத்து வழங்ககிறார். ஜோக்ஸ் சொல்றவர்களில் சிலர் மொக்கையா ஜோக்ஸ் சொல்றாங்க.

மதுரை முத்து ஆதவன்
மதுரை முத்து, ஆதவன் ரெண்டு பேரும் போட்டு வரும் கெட்டப், அதற்கு ஏற்றாற்போல இருவரும் செய்யும் காமெடிகள் மட்டுமே சிரிக்க வைக்குது. அதிலும் அவ்வப்போது சிரிக்க வைக்கும் மதுரை முத்துவின் காமெடிகளுக்கு இரவு நேர ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இரட்டை அர்த்தம்
பல சமயங்களில் இந்த காமெடி ஷோவில் இரட்டை அர்த்த காமெடிகளும் உண்டு.இது முகம் சுளிக்கத்தான் வைக்குது. இதற்கும் ரசிகர்கள் இருக்கிறார்களே...
இதோ...மதுரை முத்துவின் சில காமெடிகள்...

ஏன் தரையில்
ஆடு.. மாடு ஏன் தரையில படுக்குது தெரியுமா? ஏன்னா அதுக்கு பெட்ரூம் இல்லைன்னு சொல்றீங்களா... அது இல்லை...அவைகள் பாயில்லா பிராணிகள்னு சொல்றார்.

புருஷனுக்கு தோராயமா
உன் புருஷனுக்கு எவ்ளோ வருமானம்னு சொல்லவே மாட்டேங்கற டீ... சும்மா தோராயமா சொல்லேன்...
சொல்றேன்.. தோராயமான பதினஞ்சாயிரம் வரும்டீ...அதுல சாராயமா பத்தாயிரம் போயிரும்டீ....

மாடியில் நிற்கையில்
இருபதாவது மாடியில் நிற்கையில், ஒருத்தனுக்கு போன் வருது...உன் குழந்தை செத்துப் போச்சுன்னு... உடனே அவன் இருபதாவது மாடியில் இருந்து குதிச்சுட்டான். பதினஞ்சாவது மாடிக்கு வருகையில் நமக்குத்தான் குழந்தையே இல்லைன்னு தெரிஞ்சுது.

பத்தில் வருகையில்
பத்தாவது மாடிக்கு வருகையில்... நமக்குத்தான் கல்யாணமே ஆகலையேன்னு நினைப்பு வருது. அஞ்சாவது மாடிக்கு வருகையில் அவன் போனை எடுக்கும்போதே ரமேஷ்னு கூப்பிட்டான்..நாம் சுரேஷ் ஆச்சேன்னு நினைப்பு வந்துச்சு...
அப்புறம் என்ன நேர பரலோகம்தான்....


Click it and Unblock the Notifications











