கெட்ட வார்த்தை பேசிய காயத்ரி, பொய் பேசிய ஜூலி, ஓவியாவை கழற்றிவிட்ட ஆரவ்: நினைவிருக்கா?

By Siva

சென்னை:பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில் முதல் சீசனில் நடந்த கலாட்டாக்களை நினைவுகூர்கிறோம்.

பிக் பாஸ் முதல் சீசனை தமிழகத்தில் 7 கோடி பேரும், நாடு முழுவதும் 1.5 கோடி பேரும் பார்த்து ரசித்துள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்று துவங்க உள்ளது.

கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் என்னென்ன கலாட்டாவெல்லாம் நடந்தது என்று பார்ப்போம்.

ஜூலி

ஜூலி

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியபோது ரசிகர்களின் அமோக ஆதரவு ஜூலிக்கு இருந்ததால் போட்டியாளர்கள் பலருக்கும் அவரை பிடிக்கவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதை சொல்லி ஆர்த்தியும், காயத்ரியும் ஜூலியை டார்கெட் செய்தார்கள். மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று சின்னம்மா, சின்னம்மா ஓபிஎஸ்ஸை எங்கம்மா என்று கோஷமிட்டு பிரபலமானவர் ஜூலி.

வெறுப்பு

வெறுப்பு

முதலில் ஜூலியை கொண்டாடிய ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதத்தை பார்த்து அவரை திட்டித் தீர்த்தனர். ஜூலியை போலி என்று விமர்சித்தனர். தற்போதும் கூட ஜூலியை பலர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சீன்

சீன்

பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களில் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்காதவர் என்றால் அது காயத்ரி ரகுராம் தான். கெட்ட வார்த்தைகள் பேசியதுடன், கோபப்பட்டதால் அவர் அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்தார். முதலில் ஜூலியை டார்கெட் செய்து சர்ச்சையில் சிக்கினார். ஓவியாவுடன் சண்டை போட்டதை பார்த்த ரசிகர்கள் காயத்ரிக்கு ஆதரவளிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டனர்.

ஓவியா

ஓவியா

ஒரு நாள் இரவு ஓவியாவின் தூக்கத்தை கெடுக்கவே காயத்ரி, நமீதா மற்றும் ஜூலி சேர்ந்து சத்தமாக பாட்டு பாடினார்கள். ஓவியாவை அவர்கள் ஓவராக டார்ச்சர் செய்ததால் அவர் ஆண்களின் படுக்கையறைக்கு சென்றுவிட்டார்.

பொய்

பொய்

வார இறுதி நாட்களில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த கமல் ஹாஸன் ஜூலியின் பொய்களை அம்பலப்படுத்தினார். ஒரு வீடியோவை போட்டுக் காட்டி ஜூலியின் குட்டை உடைத்தார் கமல்.

ஆரவ்

ஆரவ்

பிக் பாஸ் வீட்டில் ஆளாளுக்கு பிரச்சனை செய்தபோது ஆரவுக்கும், ஓவியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஓவியாவுக்கு முத்தம் எல்லாம் கொடுத்துவிட்டு மருத்துவ முத்தம் என்று கூறி சமாளித்தார் ஆரவ்.

கவலை

கவலை

ஓவியாவுடன் நெருங்கிப் பழகிவிட்டு ஆரவ் அவரை ஒதுக்கத் துவங்கினார். இதை ஓவியாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரும் ஆரவிடம் பேசி சமாதானம் செய்யலாம் என்று எவ்வளவோ முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை. இதை பார்த்த ரசிகர்களுக்கு ஆரவ் மீது வெறுப்பு ஏற்பட்டது. காதல் தோல்வியால் மனமுடைந்த ஓவியா நீச்சல் குளத்தில் குதித்தார். பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு செல்வதாக கூறிவிட்டு கிளம்பினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X