நைனா...நைனா...மனோபாலாவை கட்டிப்பிடித்து தூக்கிய வெட்டிக்கிளி பாலா...எதுக்கு தெரியுமா?
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அதிக ரசிகர்களை கவர்ந்த ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி, ஸ்டிரெஸ் பஸ்டர் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து விட்டது.
சமையலுடன் காமெடி கலந்த இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயக்குமாரும், இரண்டாவது சீசனில் கனி அகத்தியனும் டைட்டில் வென்றனர். பிரபலங்கள் பலரின் ஃபேவரைட் ஷோவாக இருக்கும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது.

இவர்கள் தான் போட்டியாளர்கள்
குக் வித் கோமாளி சீசன் 3 ல் போட்டியாளர்களாக ரோஷினி ஹரிபிரியன், மனோ பாலா, கிரேஸ் கர்ணாஸ், ஆன்டனைி தாசன், அம்மு அபிராமி உள்ளிட்ட 8 பேர் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர். வெட்டுக்கிளி பாலா, சிவாங்கி, மணிமேகலை, மூக்கி முருகன் உள்ளிட்டோர் கோமாளிகளாக பங்கேற்க உள்ளனர். கடந்த இரண்டு சீசன்களை போல் இந்த சீசனிலும் செஃப்ஸ் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருக்க உள்ளனர்.

எப்போ ஆரம்பம்
குக் வித் கோமாளி சீசன் 3 வரும் ஜனவரி 22ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் போட்டியாளர்கள் அறிமுகம் தொடர்பான ப்ரோமோக்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. நேற்று ரோஷினி ஹரிபிரியன் அறிமுகம் செய்யப்பட நிலையில், இன்று மனோபாலா வரும் ப்ரோமோ வெளியிடப்பட்டது.

நைனா...நைனா...
இந்த ப்ரோமோவில் மனோபாலாவை பார்த்ததும், நைனா...நைனா என ஓடிச் சென்று கட்டிப்பிடிக்கிறார் வெட்டுக்கிளி பாலா. அதைக் கேட்டு, மகனே...இன்னுமாடா இருக்க என காமெடியாக கேட்கிறார் மனோபாலா. ஆட்டம், பாட்டத்துடன் அனல் பறக்கும் ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video

சிரிப்புக்கு பஞ்சமில்லை
இங்க சிரிப்புக்கு பஞ்சமே இல்லை என்ற கேப்ஷனுடன் இந்த ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ப்ரோமோக்கள் எப்போ வரும். இதெல்லாம் பார்த்துட்டோம். புதுசா ஏதாவது ப்ரோமோ வெளியிடுங்கள் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











