குக் வித் கோமாளி சீசன்3 விரைவில்… இனி ஒரே கொண்டாட்டம் தான் போங்க!

சென்னை : விஜய்டிவியில் சீரியல் என்றாலும்... ரீயாலிட்டி ஷோக்கள் என்றாலும்... காமெடி நிகழ்ச்சிகள் என்றாலும் அது வேறு மாதிரியாக இருக்கும். இதனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு என்றே தனிக்கூட்டம் உண்டு.

இந்த வகையில் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இது ஒரு சமையல் நிகழ்ச்சிதான் என்றாலும் இதில் இடம் பெற்ற நகைச்சுவைக்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்குகிறது என்ற சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

சிரிப்புக்கு பஞ்சமில்லை

சிரிப்புக்கு பஞ்சமில்லை

அது என்னடா குக் வித் கோமாளி... சமையல் நிகழ்ச்சியில் கோமாளிகளுக்கு என்ன வேலை... வித்தியாசமா எதையோ பண்றாங்க என்று பேசியவர்களையும் விழுந்து விழுந்து சிரிக்கவைத்த நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் சமையல் செய்வதில் சுவாரசியம் இருக்கோ இல்லையோ... கோமாளிகளின் அட்டகாசம் தூக்கலாகவே இருக்கும்.

குக் வித் கோமாளி சீசன்1

குக் வித் கோமாளி சீசன்1

குக் வித் கோமாளி சீசன்1, 2019 நவம்பர் மாதம் தொடங்கியது. இதில், ரேகா, உமா ரியாஸ் கான், வனிதா விஜயகுமார், பிரியாங்கா ரோபோ சங்கர், ரம்யா பாண்டியன், மோகன் வைத்தியா, தாடி பாலாஜி, ஞானசம்பந்தம் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இந்த போட்டியில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சியில் சமையல் கலை நிபுணர்களான செஃப் தாழு மற்றும் செஃப் வெங்கடேஷன் பட் ஆகியோர் இருந்தனர். கோமாளிகளின் அட்டகாசம் ஒரு புறம் என்றால் இவர்கள் இருவரும் செய்யும் டைமிங் காமெடியும், சேட்டையும் ரசிக்கும் படி இருக்கும்.

காரக்குழம்பு கனி வின்னர்

காரக்குழம்பு கனி வின்னர்

குக் வித் கோமாளி சீசன் 1 மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதே கலகலப்புடன் 2-வது சீசன் தொடங்கியது. இதில், நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோரும் கலந்துக் கொண்டனர். குக் வித் கோமாளி சீசன் 2ல் டைட்டில் வின்னராக காரக்குழம்பு கனி இடம்பெற்றார். அஸ்வினும், ஷகிலாவும் அதற்கடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

நவம்பரில்

நவம்பரில்

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன்3 எப்போது தொடங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் நவம்பர் மாதம் 3வது சீசன் தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால், குக்வித் கோமாளி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அக்டோபர் மாதம் பிக் பாஸ்... நவம்பர் மாதம் குக்வித் கோமாளி... அட இனி ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான் போங்க...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X