Ashwin kumar: சாக்லேட் பாய்.. குக் வித் கோமாளி அஸ்வின்.. எப்படி இருக்காருனு பாருங்க!

சென்னை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் அஸ்வின் குமாரின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த போட்டோவிற்கு டீன் ஏஜ் பெண்கள் இதயத்தை பரிசாக அளித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் ஆபிஸ் சீரியல் மூலம் அறிமுகமான அஸ்வின், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் சுவாங்கி இவரை சுற்றி சுற்றி வந்தது பார்க்கும் படி இருந்தது. அதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான அஸ்வின், அதற்கு முன்பாகவே ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரமின் அண்ணனாக நடித்திருந்தார். அதன் பின் ஓ மணப்பெண்ணே படத்தில் பிரியா பவானி சங்கரின் எக்ஸ் லவ்வராக நடித்திருப்பார்.

ashwin kumar cook with comali photo

சர்ச்சை பேச்சு: பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஸ்வின் குமார் 2021ம் ஆண்டு வெளியான என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின், கதை பிடிக்கலைன் தூங்கிடுவேன் இப்படித்தான் பல இயக்குநர்கள் கதை சொல்ல வந்து தூங்கவைத்ததாக பேசி இருந்தார்.அவரது அந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்து, ஒரு படத்தில் கூட ஹீரோவா நடிக்கல அதுக்குள்ள ஓவர் பில்டப் என இணையவாசிகள் அவரை வெச்சு செய்துவிட்டனர். அதற்கு ஏற்றார் போல என்ன சொல்ல போகிறாய் படம் தியேட்டரை விட்டே ஓடிவிட்டது.

செம்பி: இதையடுத்து, மைனா, கும்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வித்தியாசமான கெட்டப்பில் கோவை சரளா நடித்த செம்பி படத்தில் வழக்கறிஞராக அஸ்வின் குமார் நல்லதொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்து, சர்ச்சை ஓரளவிற்கு சரி கட்டிக்கொண்டார் அஸ்வின் குமார். செம்பி படத்தைத் தொடர்ந்து, நாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் வரும் 'நொடிக்கு நொடி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை தொலைக்காட்சி நடிகராகவும் தொகுப்பாளராகவும் கொடி கட்டி பறந்த விஜய் ஆதிராஜ் இப்படத்தை இயக்க உள்ளார்.

சாக்லேட் பாய்: இப்படத்தில் படத்தில் பிஸியாக இருக்கும் அஸ்வின் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட் சூட்டுடன் இருக்கும் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த டீன் ஏஜ் கேர்ஸ் அவருக்கு இதயத்தை பரிசாக அளித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X